இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்த சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோவின் மேல்முறையீடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஊழல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதற்கு எதிராக கீர் அந்த மேல்முறையீட்டைச் செய்திருந்தார்.
அவரின் வழக்குரைஞர் ஷாபி அப்துல்லா, ஜப்பானில் ஆசியான் மனித உரிமை ஆணையம் ஏற்பாடு செய்துள்ள 4-நாள் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்.
“அதில் அவர் மலேசியாவைப் பிரதிநிதிப்பதாகக் கூறியதால் நீதிமன்றம் ஒத்திவைப்பை அனுமதித்தது”, எனக் கூட்டரசு நீதிமன்றத் தொடர்புப் பிரிவுத் தலைவர் முகம்மட் அய்ஸுடின் ஸுல்கிப்ளி கூறினார்.
இது இரண்டாவது ஒத்திவைப்பாகும்.