சமயங்களுக்கிடையிலான விவகாரங்களுக்கு ஷியாரியா, சிவில் நீதிமன்றங்கள் தீர்வு காண வேண்டும்

nancyஷியாரியா நீதிமன்றங்களும்  சிவில்  நீதிமன்றங்களும் முஸ்லிம்கள்,  முஸ்லிம்-அல்லாதார்  சம்பந்தப்பட்ட  வழக்குகளைச்  சுமுகமாக  தீர்த்துவைக்க  ஒரு வழிமுறையைக்  காண  வேண்டும்  என  வலியுறுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கும்  முஸ்லிம்-அல்லாதாருக்கும்  வெவ்வேறான  நீதிமுறைகள்  உள்ளதால்,  முரண்படும்  விசயங்களைச்  சீர்படுத்த  இருவகை  நீதிமன்றங்களும்  கூடிப்  பேசுவது  அவசியம்  எனப்  பிரதமர்துறை  அமைச்சர்  நன்சி  ஷுக்ரி  கூறினார்.

“இரண்டு  நீதிமன்றங்களும் சேர்ந்து  அடிக்கடி  எழும்  விவகாரங்களை  ஆராய  வேண்டும்”,  என்றாரவர்.

முஸ்லிமாக  மதமாறிய  இஸ்வான்  அப்துல்லாவுக்கும்  ஒரு  இந்துவான  அவரின்  முன்னாள்  மனைவிக்குமிடையில்,  குழந்தைகளின்  பராமரிப்பு  தொடர்பில்  எழுந்துள்ள  சர்ச்சை  குறித்துக்   கருத்துரைத்தபோது  அவர்  இவ்வாறு  கூறினார்.

அவ்விவகாரம்  குறித்து  நாளைய  அமைச்சரவைக்  கூட்டத்தில்  விவாதிக்கப்படும்  எனவும்  நன்சி  தெரிவித்தார்.

— Bernama