எஸ். தீபாவும் அவரின் முன்னாள் கணவர் இஸ்வான் அப்துல்லாவும் செய்த எல்லாப் புகார்கள்மீதும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர் ஆனால், குழந்தை பராமரிப்பு விவகாரத்தில் மட்டும் அவர்களால் எதுவும் செய்ய இயலாது என இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் இன்று தெளிவுபடுத்தினார்.
இஸ்வான் தன்னைத் தாக்கினார் என்ற தீபாவின் குற்றச்சாட்டு உள்பட அவரின் எல்லாப் புகார்கள்மீதும் போலீசார் நான்கு விசாரணை அறிக்கைகளைத் தயாரித்திருப்பதாக காலிட் கூறினார்.
“குழந்தைப் பராமரிப்பில் மட்டும் போலீஸ் தலையிடாது. மற்றபடி எங்கள் கடமையைச் செய்வோம்.
“அவரை (இஸ்வான்) ஏற்கனவே கைதும் செய்தோம். விசாரணை முடியும்வரை பிணையில் விடப்பட்டிருக்கிறார்”, என காலிட் கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இவரு ஒன்னும் செய்யபோவதில்லை.கடமைக்கு பேட்டி கொடுகிராறு அவளவுதான்.
கடத்தல்காரனை விசாரிப்பார்களாம் ; ஆனால் நடவடிக்கை எடுக்க மாட்டார்களாம் !!!
டண்டனக்க IGB
நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அவமதிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை என்று கூறுகிறாரோ இந்த (சோ கோல்ட்) போலிஸ் தலைவர்???? நல்ல காமடி போ!!!!!
கர்ப்பாளின் மறைவு ஈடு செய்யக் கூடியது அல்ல