மே தினம் பேரணியா? வாங்க விசாரணைக்கு!

 

May Day 2014 rallyவிலைவாசிகள் உயர்வு, பொருள்கள் மற்றும் சேவைகள்  வரி (ஜிஎஸ்டி)  எதிர்ப்பு பேரணியை மே தினத்தன்று (மே 1) நடத்துவதற்கான ஏற்பாட்டுக் குழுவினரை டாங் வாங்கி போலீசார் விசாரனைக்கு அழைத்துள்ளது.

மலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) தலைமைச் செயலாளர் எஸ். அருட்செல்வம் மற்றும்PSM-Arul பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா ஆகியோரை டாங் வாங்கி போலீஸ் நிலையத்திற்கு இன்று பிற்பகல் மணி 2.30 வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 1, 2015 லிருந்து அமலுக்கு வரவிருக்கும் ஜிஎஸ்டி வரியை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இந்த மாபெரும் மே தின பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாத தொடக்கத்தில் நாடாளுமன்றம் ஜிஎஸ்டி மசோதாவை ஏற்றுக் கொண்டது.