நேர்மைவாய்ந்த மலாய்க்காரர்கள் குறைந்துவிட்டார்களே: வருந்துகிறார் ஜைட்

zaidAஒரு   நேர்மைவாய்ந்த  மலாய்க்காரர். தனக்கு  எது  செய்யப்படக்கூடாது  என்று  நினைக்கிறாரோ  அதை  அவர்  மற்றவருக்குச்  செய்ய  மாட்டார்  என்கிறார்  ஜைட்  இப்ராகிம்.

அப்படிப்பட்ட  மலாய்க்கார்கள்  நிறைய  பேர் இருக்கிறார்களா   என்று  அந்த  முன்னாள்  சட்ட  அமைச்சர்  தம்  வலைப்பதிவில்  ஒரு  கேள்வியை  எழுப்பியுள்ளார்.  அதற்கு  அவரே  பதிலும்  அளித்துள்ளார்.

“கடினமான  கேள்விதான். ஒரு  மலாய்க்காரன்  என்ற  முறையில், ‘உண்டு’என்று  திட்டவட்டமாகக்  கூற முடியாமல்  இருப்பதை  நினைக்கும்போது  சங்கடமாக  இருக்கிறது”,  என்றாரவர்.

எஸ்.தீபாவும்  முஸ்லிமாக  மதமாறிய  அவரின்  முன்னாள் கணவர்  இஸ்வான்  அப்துல்லாவும்  சம்பந்தப்பட்ட  விவகாரம்  பற்றிக்  கருத்துரைத்த  ஜைட்,  ஒரு  தாயாருக்கு  அவரின்  ஆறு-வயது  மகனைப்  பராமரிக்கும்  உரிமை  அவர்  இந்து  என்பதற்காக மறுக்கப்படுவதை  எண்ணிச்  சீற்றம் கொள்ள  வேண்டாமா?  ஆனால்,  இன்றைய  மலாய்க்காரர்கள்  சீற்றம்  கொள்ளாதிருப்பதை  எண்ணி  வருத்தம்  தெரிவித்தார்.

“அதற்கு  மாறாக,  மகனைச்  சட்டவிரோதமாக  தூக்கிச்சென்ற  முஸ்லிமாக  மாறிய  தந்தையை  அவர்கள்  ஆதரிப்பதுபோலத்  தெரிகிறது. மகன்  இந்துவாக  மதமாற்றம்  செய்யப்படுவதைத்  தடுப்பதற்காக  அவர்  அப்படிச்  செய்ததாகவும்  சொல்லித் திரிகிறார்கள்”,  என்றாரவர்.