பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், சீன நாளடான சதர்ன் வீக்லி- இடம் தாம் கூறிய ஒரு கருத்தைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம் வசதிக்கு ஏற்ப “திரித்துக் கூறிவிட்டார்” எனச் சாடியுள்ளார்.
நேற்று நிதி அமைச்சின் கூட்டத்தில் பேசிய நஜிப், “தாம் மட்டும் பிரதமராக இருந்தால் ஒரு நொடியில்” மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 மர்மத்தை தீர்க்க முடியும் என்று அன்வார் கூறியதாகக் குறிப்பிட்டு அதற்காக அவரைச் சாடி இருந்தார்.
ஆனால், தாம் அப்படிச் சொல்லவில்லை என்ற அன்வார், தாம் சொன்னது தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.
“ஒரு வினாடியில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகவல் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்திருப்பேன்” என்று மட்டுமே தாம் சொன்னதாகக் கூறினார் அன்வார்.
தாம் சொல்லாத ஒன்றைச் சொன்னதாகக் கூறி தம்மைச் சாடி இருக்கிறார்கள் என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
BN என்றாவது
உண்மையை
பேசி
இருக்கா?
அல்தாந்துயாவிலிருந்து – MH 370 விமானம் வரை திரித்து கூறி கொண்டுதான் இருகிறார்கள். இதற்கெல்லாம் கோபம் கொள்ளலாமா ?
இருந்தாலும் பிரதமருடைய லொள்ளு கொஞ்சம் OVER தான்.
நம்பிக்கை என்று சொல்லி இந்தியர்களின் வாக்குகளை பெற்ற மஹா பொய் வாயந்தான் நஜிப் என்பது தெரியாதா?
கர்ப்பால் காலமானார்