மலேசியாவின் பெருமைமிக்க எதிரணித் தலைவர் கர்பால் சிங் இன்று அதிகாலையில் நடந்த ஒரு விபத்தில் கொல்லப்பட்டார்.
அதிகாலை மணி 1.10 க்கு 301.6 கிமீ வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது. கர்பாலின் மகன் ராம் கர்பால் மற்றும் ஓட்டுநர் காயமுற்றதாக நம்பப்படுகிறது.
இன்று நடைபெறவிருக்கும் வழக்கு ஒன்றில் கலந்து கொள்வதற்கு கர்பாலும் அவரது மகனும் சென்று கொண்டிருந்ததாக மலேசியாகினிக்கு தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில், கம்பாரில் குவா தெம்புருங்கிற்கு அருகில், எடுக்கப்பட்ட படத்தில் விபத்திற்குள்ளான வெள்ளை தோயோட்டா அல்பார்ட் கார் மோசமாக சேதமடைந்திருப்பதைக் காட்டுகிறது.
கர்பால் விபத்து நடந்த இடத்திலேயே உயிர் துறந்ததாக அவரின் மகனும் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் த ஸ்டார் நாளிதழிடம் கூறினார்.
இன்று காலை மணி 3.30க்கு அந்நாளிதழ் தொடர்பு கொண்ட போது, ” எனது தம்பி ராம் சொற்ப காயங்களுக்கு ஆளானதாகவும் அவருடன் தொடர்பு கொள்ள முயன்று வருவதாகவும் கோபிந் கூறினார்.
பின்னர் வெளியிடப்பட்ட ஒரு போலீஸ் அறிக்கையின்படி ராமும் விபத்திற்குள்ளான காரின் ஓட்டுநரும் காயமடையவில்லை. ஆனால், கார்பாலின் இந்தோனேசிய பணிப் பெண் கடுங்காயங்களுக்கு ஆளாகியுள்ளார். இப்போது அவர் ஈப்போ பெர்மைசுரி பைனுன் மருத்துவமலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கார்பாலின் கார் பின்னாலிருந்து மோதிய லாரியின் ஓட்டுநரும் அதிலிருந்த மூன்று பயணிகளுக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை.
74 வயதான கர்பால் இதற்கு முன்பு 2005 ஆம் ஆண்டில் ஒரு கார் விபத்தில் சிக்கி உடல் இயக்க ஆற்றல் இழந்த நிலையில் சக்கர-நாற்காலியில் வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
ஆற்றல் மிக்க அரசியல்வாதியான கர்பால் சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்ற வழக்குரைஞராவார்.
நீண்டகாலமாக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த கர்பால், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய நெருப்புக் கக்குகிற உரைகள் அவருக்கு “ஜெலுத்தோங்கின் புலி” என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.
சமீபத்தில் கர்பால் சிங் டிஎபியின் தலைவர் பதவியிலிருந்து தற்காலமாக விலகிக் கொண்டார். அவருக்கு நீதிமன்றம் விதித்தத் தண்டனைக்கு எதிராக அவர் செய்திருந்த மேல்முறையீட்டின் முடிவு தெரியும் வரையில் பதவியிலிருந்து விலகியிருக்கப் போவதாக அவர் கூறியிருந்தார்.
2009 ஆம் ஆண்டில், பேராக் மாநில அரசமைப்பு நெருக்கடியின் போது கர்பால் மாநில சுல்தானுக்கு எதிராகப் பயன்படுத்திய சொற்கள் தேசநிந்தனையானது என்று அவர் மேல் குற்றம் சாட்டப்பட்டது.
பிரதமரின் அனுதாபம்
டிவிட்டர் வழி பிரதமர் நஜிப் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
“நான் இப்போதுதான் அங்காரா வந்து சேர்ந்த வேளையில் மாண்புமிகு கர்பால் சிங் சாலை விபத்தில் மரணமுற்றதாக கேள்விப்பட்டேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபம்”, என்று அந்த டிவிட்டர் செய்தியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கர்பால் காலமானதை அறிந்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு ஆழ்த அனுதாபத்தை தெரிவித்து வருகின்றனர்.
தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கா கோர் மிங், அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கும் செய்தி: கர்பால் சாலை விபத்தில் இன்றிரவு மரணமுற்றார். மலேசியா ஓர் உண்மையான தேசப்பற்று மிகுந்த மகனை இழந்து விட்டது”, என்றார்.
“நமது அருமை நண்பர் கர்பால் இப்போது நம்முடன் இல்லை… அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..”, என்றார் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங்.
மரணமுற்ற கர்பால் மற்றும் மைக்கல் ஆகியோரின் உடல்கள் காலை மணி 7.20 க்கு ஈப்போ பொதுமருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், அவரது துணை முதலமைச்சர் முகமட் ரஷிட் ஹஸ்நோன் மற்றும் பேராக் மாநில முன்னால் மந்திரி புசார் நிஜார் ஜமாலுடின் ஆகியோர் அங்கிருந்தனர்.
அவர்கள் தங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தை கர்பாலின் மகன்கள் கோபிந்த் மற்றும் ஜக்தீப்பிடம் தெரிவித்தனர். கர்பாலின் துணைவியார் அழுது கொண்டிருக்க காணப்பட்டார். உடல்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சவப் பரிசோதணை காலை மணி 10.30 அளவில் முடிவுறும் என்று எதிர்பார்ப்பதாக கோபிந்த் கூறினார். அதன் பின்னர், உடல் பினாங்கிலுள்ள குடும்ப இல்லத்திற்கு பிற்பகல் மணி 1.00 அளவில் கொண்டு செல்லப்படும் என்றாரவர்.
விபத்து குறித்து தமக்கு காலை மணி 2.15 க்கு தெரிவிக்கப்பட்டதாக கோபிந்த் கூறினார். அதனைத் தொடர்ந்து அவர் தமது மனைவியுடன் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்ததாக கூறினார். கோபிந்தும் அவரது தாயார் குர்மிட் கவுரும் கர்பாலின் உடலைப் பார்த்தனர்.
மூத்த அரசியல்வதியான கர்பாலின் சவ அடக்கம் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்பாலின் குடும்பத்தினரும் நண்பர்களும் வெளியூர்களில் இருக்கின்றனர். அவர்களின் வருகைக்காக காத்திருக்கிறோம் என்றாரவர்.
“கர்பாலின் உடல் பினாங்கு, ஜாலான் உத்தாமாவிலுள்ள அவர்களது குடும்ப இல்லத்தில் வைக்கப்படும்”, என்று கோபிந்த் மேலும் கூறினார்.
ஆழ்ந்த அனுதாபங்கள் !!!
ஆழ்ந்த அனுதாபங்கள்…
நாம் மிகச்இதுக் கொண்டதை சிறந்த ஓர் அரசியல்வாதி, மக்களின் பிரதிநிதி, சட்ட புத்தகத்தை இழந்து விட்டோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம். மக்களுக்காக குறைகள் கொதித்த உன்னை இறவன் இவ்வளவு சீக்கிரம் அழைத்துக் கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்லாம் நன்மைக்கே.
இனி நாட்டில் நீதி உறங்கி விடுமோ??? என்ற அச்சம் என்னுள் தோன்றுகிறது….
சிருபன்மைய்னருக்கும் சராசரி மலைய்சியனுக்கும் நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்த நல்லவரை இழந்துவிட்டோம்.அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்…
எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
;( 🙁 🙁 ஒரு உண்மை மலேசியா ஜனநாயக போராளி , தன போராட்டம் நிறைவு பெரும் முன்னே இறைவனால் அழைக்க பட்டு விட்டாரா? அல்லது சதி நாச பாவிகளின் “இரை” யாகி விட்டாரா?? என் ஆழ்ந்த இறக்கள்கள் அவர் தம் குடும்ப உறுப்பினர்க்கும், உண்மை ஜனநாயகம் விரும்பும் மலேசியர்களுக்கும்!!
மலேசியா ஜனநாயக வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார் இந்த உண்மை “மாமனிதர்” . இறைவன் அவர் ஆன்ம சாந்திக்கு வழிவகை செய்வானாக!
துக்கம் தொடையை அடைக்கிறது…. கண்கள் கலங்கிய வண்ணமே உள்ளன! எதோ ஒரு வெறுமை மனதை ஆட்கொள்கிறது. இனி மலேசியன் ஜனநாயகம் எப்படியோ? இறைவா??
எங்கள் குடும்பத்தினரின் ஆழ்த்த அனுதாபங்கள்,நீதி தேவதை அழுகிறாள்,மக்களும் அழுகிறார்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம் .
சோ SAD
முக்கியமான காலக்கட்டத்தில் எங்களை தத்தளித்து விட்டுபோக, எப்படி உங்களுக்கு மனம் வந்ததோ இமயமே.
வீறுகொண்ட சிங்கம், விருட்டென போய் விட்டதே. அன்னாரின் உயிர் சாந்தி அடைய எங்களின் பிராத்தனைகள். அன்னாரின் குடும்பத்தாருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
நம் நாட்டின் ஜனநாயகம் காத்த பேராளி,போராளி.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன்.குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஒரு போராளி மீளாத் துயில் கொண்டார்..
ஆழ்ந்த அனுதாபங்கள்…
ஆழ்ந்த அனுதாபம் …
ஒரு போராளி இவ் உலகில் இல்லை எனபது ஏற்க முடியவில்லை
ஞானம் valikkiratu
கர்பால் எனும் சிங்கம் மறைந்தாலும் நமது நினைவைவிட்டு மறையாத ஒரு அற்புத மனிதர் . ஜஸ்டிஸ் ஜஸ்டிஸ் ஜஸ்டிஸ் .எமது ஆழ்த்த அனுதாபங்கள் .
இந்த செய்தியைக் கேட்டதும் முதலில் சதியாக இருக்குமோ என்று தான் பளிச்சிட்டது. ஆனால் ……………….புரியவில்லை! அனுதாபங்கள்!
நல்லவர்கள் ..வல்லவர்கள் எல்லாம் போய்க்கொண்டே இருக்கிரால்கள்..ஏதும் நல்லதா தெரிய வில்லை..நாடு நாசமாகி கொண்டிருக்கின்றது…தர்மம் மடிகிறது ..அக்கரமங்கள் எல்லாம் தலைவிரித்து ஆடி கொண்டிரிடுகின்ற்றது…! இது உண்மையிலே ஒரு விபத்தா.. இல்லை சதியா…! காரணம் சதி எல்லாம் இங்கு ஒன்றும் பெரிய விஷயமே கிடையாதே…..!!
வாழந்த / வளர்ந்த சமுதாயம் வியக்கும் வகையில் வழக்குக்கு வியாக்கியானம் சொன்ன ஒரு மாமேதை… (ஞாலம்) பரணிக்கு விடைக் கொடுத்த விதம் எற்றுக் கொள்ள முடிய்வில்லை. கர்பால் இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் அவர் விளை மதிக்க முடியாத பொன்தான்.. அன்னாரின் ஆதமா சாந்தியடைய பரம்பொருளை வேண்டி இறைஞ்சிகின்றேன். அவர்தம் குடும்ப உறுபினர்களுக்கு என் ஆழ்ந்த ஆனுதாபங்கள்…
மாண்புமிகு கர்பால் அவர்களின் திடீர் மரணம் அதிர்ச்சியை கொடுக்கிறது .அவர்தம் குடும்பத்தாருக்கு எல்லாம் வல்ல இறைவன் ஆறுதலையும் சாந்தியையும் தரட்டும்..
அம்னோவும் அவன்களின் ஓடும் நாய்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியாக
இருக்கும் –
கர்பால்தான் நம்மின் கடைசி புலி.இந் நாட்டில் இனிமேல் நான் எந்த நம்பிக்கையும் வைக்க போவதில்லை. கர்பால் எவ்வளவோ இந் நாட்டிற்க்காக செய்தும் என்ன பலன்? காழ்புனற்சிகொண்ட ஆட்சியில் தில்லு முள்ளு செய்து உட்கார்ந்து இருக்கும் ஈன ஜென்மங்கள் அவரின் வாழ்வில் சொல்ல ஒண்ணா கொடுமைகள் இழைத்து அநீதி செய்தனர். ஆண்டவன் உண்மையிலேயே இருப்பானாகில் வாழும் காலத்திலேயே இந்த ஈன ஜென்மங்கள் படும் -அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.அன்னாரின் குடும்பத்தினர்க்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். என்ன உலகமடா இது.
ஆண்டவன் ஆகாசமதில் தூங்குகின்றாரே !
கர்ஜித்த சிங்கம் நம்மிடம் இருந்து மறைந்து விட்டதே,அன்னாரின் உயிர் சாந்தியடைய பிராத்திக்கிறேன்!
ஆத்மக சாந்தி…!!!!
செல்வாக்கு மிக்க மாமனிதர், பண்புள்ளவர். நம் இனத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் இழந்து விட்டோம். ‘புலி’ கர்பால் சிங் இன்னும் மறையவில்லை. அவர் இன்னும் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம். அன்னாரின் குடுபத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
எங்களின் அனுதாபங்கள்
ஆழந்த அனுதாபங்கள் , சிங்கம் சிங்கம்தான் !
அநீதி அன்னாரை அறையும்முன், இறைவன் நீதிமானை அணைத்துக்கொண்டான்…. கர்ஜிக்கும் சிங்கமே.. உறுமும் புலியே.. உமது சேவை மக்களின் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும்…. மாமனிதா உமது மறைவு தேசத்திற்கே மாபெரும் இழப்பு…. வேதனையுடன் ஆழ்ந்த அனுதாபங்கள்!!!!
எரியற நெருப்பிலே எண்ணையை ஊத்தறான் அந்த அறிவு கெட்ட மொன்ன மாறி ஜுல்கிப்லி நோர்டின். அவன் கும்பிட சாமி உண்மையிலேயே இருந்த, அவனுக்கு நல்ல பாடம் புகட்டட்டும்! இவனை போன்ற ஈன ஜென்மங்களுக்கு இது போன்ற சாவு வர மாட்டேன் என்கிறதே!! தேஞ்ச செருப்பாலே அடிக்கணும் இந்த தருதலே பையலே!! ராஸ்கல்!!
ஆழ்ந்த அனுதாபம்
ஆழ்ந்த அனுதாபங்கள்
மலேசியா ஓர் உண்மையான தேசப்பற்று மிகுந்த தலைவனை இழந்து விட்டது”,
கர்பால் குடும்பதிட்க்கு செம்பருத்தி வாசகர்களின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள் .
அவரின் இறப்பு மலேசியாவின் பெறேரப்பு அவரின் ஆத்மா சந்தியாடயா இறைவனை ப்ர்திகிறோம்
அவரின் இறப்பு மலேசியாவின் பெறேரப்பு அவரின் ஆத்மா சந்தியாடயா இறைவனை ப்ர்திகிறோம்
ஒரு உண்மையான மலேசிய மைந்தனை நாடு இழந்துவிட்டது. மனித உரிமைக்கு குரல் எழுப்பி, ஜனநாயகத்தைக் காட்டிக்காக்க முற்பட்ட ஒரு தலைசிறந்த தலைவனை இழந்திருக்கிறோம் என நினைத்தால் தன் மனம் கனகின்றது.
ஆழ்ந்த அனுதாபம் ….
DEEPLY SHOCKED
மாண்புமிகு கர்பால் அவர்களின் திடீர் மரணம் , தேசத்திற்கே மாபெரும் இழப்பு ,வேதனையுடன் ஆழ்ந்த அனுதாபங்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடயா இறைவனை பிரதிபோம்.ஒரு மின்னல் வேக சிங்கத்தை நாடு இழந்துவிட்டது.
மயிர்நீப்பின் உயிர் வாழா கவரிமானாக வாழ்ந்தவர்,
பாக்காதான் ராக்யாட் ஒரு போராளியை இழந்துவிட்டது,
அவர்தம் குடும்பதினரிக்கும் பாக்காதான் ராக்யாட் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் .
முலு த்ரியம்பகம் பாராயணம் சமர்பனம்,வும்மை குற்றவாலியாக தண்டிக்க இறைவன் இடம் கொடுக்காததை நினைத்து வியக்கிரேன்.கர்பால் சாட்டிய(அரன்மனை) குற்றம் குற்றமே.வுங்கள் குரு வும் புகழை காத்துவிட்டார்.நாராயண வாழ்க வும் நாமம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்! இறைவன் ஏதோ ஏற்பாட்டைக்கொண்டுள்ளார் போலும்!!! நாட்டிற்கு நல்லது நடக்கட்டும்.
தீப்லி சொக்கத்
தேசத்திற்கே மாபெரும் இழப்பு ,வேதனையுடன் ஆழ்ந்த அனுதாபங்கள்.
நான் நேரில் கண்ட ஒரு சிங்கம் ,அவரின் இழப்பு நமக்கு
பேரிழப்பு ஆனால் அரசியல் ஊழல் பேர் விழிகளுக்கு நின்மதி
இனி நாடாளுமன்றம் ………………………………….என்ன சொல்வது நைனா .
ஈப்போ பெரிய மருத்துவமனையிலிருந்து சற்று முன்தான் வீடு திரும்பினேன். கார் டிரைவரும், கர்பாளின் மகன் ராம் கர்பாலும் நலமுடன் உள்ளனர். இவர்கள் இருவரும் சவக்கிடங்கு இடத்தில் இருந்தனர். கர்பாளின் இந்தோனேசிய பணிப்பெண் கவலைக்கிடமாக உள்ளார். பிற்பகல் 1.30க்கு பெரிய மருத்துவமனையை விட்டு சவவண்டி பினாங்கு நோக்கி புறப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சவ அடக்கம். இறுதி அஞ்சலி செலுத்த விரும்புவோர், பினாங்கில் செலுத்தலாம். ஈப்போ சவக்கிடங்கில் அவரின் முகத்தை யாராலும் பார்க்க இயலவில்லை. பினாங்கில் அவரது பூத உடல் கிடத்தி வைக்கப்பட்டுள்ள முகவரி, 144-A , Jalan Utama , Western Road , Penang .
ஆழ்ந்த அனுதாபங்கள் !