எம்எச்370-இல் இருந்த கருப்புப் பெட்டி யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிப்பதற்காக சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் பிரிட்டனுக்குச் சென்றிருப்பதன் நோக்கம் அது வெளிநாட்டவர் கைகளில் சிக்கிவிடாமல் தடுப்பதற்காகத்தானோ என்று ஐயுறுகிறார் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்.
“கருப்புப் பெட்டியைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். இது ஏன் என்று ஆர்வத்தைத் தூண்டுகிறது”, என்றாரவர்.
அதில் உள்ள விவரங்கள் மற்ற நாடுகளைவிட தனக்குத்தான் முதலில் கிடைக்க வேண்டும் என மலேசியா விரும்புகிறது போலும்.
அப்படியானால் அதில் உள்ள எதைப் பாதுகாக்க நினைக்கிறார்கள் என்றவர் வினவினார்.
அப்படியானால் MH 370 விமான பேரிடர் நமது நாட்டின் சதி வேலையாக இருக்குமோ ??? எங்கேயோ இடிக்குதே !!!!!!!!!
என்னமோ நடக்குது மௌனமா இருக்குது . ஒண்ணுமே புரியலே உலகத்துலே
இது சதி வேலை என்பது மட்டும் அல்ல அது கடத்தல் வேலை என்பது ஆரம்ப முதலே சொல்லப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானுக்குக் கடத்தப்பட்டதாக ஒரு செய்தி. அன்வார் கேட்ட கேள்வியில் ஒரு நியாயம் உண்டு. மங்குஸ்தீன் இல்லாத ஒரு காலகட்டத்தில் அது ஏன், எப்படி நான்கு டன் பழத்தை ஏற்றிக் கொண்டு போனார்கள்? எங்கோ ‘வேண்டுமென்றே’ தவறு நடந்திருக்கிறது. கறுப்புப் பெட்டி கிடைத்தாலும் மலேசியர்களுக்கு உண்மை கிடைக்காது!
MH 370, காலை 8.10 மணி வரை பறந்து உள்ளதாக செயற்கைக்கோள் தகவல்கள் காட்டுவதாக செய்திகள் பரப்பப்பட்டன. மலேசியா ஆகாயப் படை விமானங்கள் காலையில் 8.00 மணிக்கு மறைந்த விமானத்தைத் தேடி பறந்தன என்ற தகவலை CNN குறிப்பிட பட முடியாத மலேசிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளியிட்ட செய்தி மலேசியா அரசாங்கத்தால் மறுக்கப்பட்டது!. கடைசியாக விமானியிடமிருந்தோ அல்லது கடத்தல்காரர்களிடமிருந்தோ இறுதி எச்சரிக்கை வந்தபொழுது ஆகாயப்படை விமானங்கள் அனுப்பபட்டனவா? காணாமல் போன விமானம் பறந்துக் கொண்டிருந்த வேளையில் மலேசியா அரசாங்க அதிகாரிகளையோ அல்லது வேறு நபர்களையோ விமானிகள் தொடர்பு கொண்டிருந்தனரா? கறுப்புப் பெட்டியை விமான தயாரிப்பு நிறுவனமான போயீங் இடம் ஒப்படைத்து தகவல்கள் திரட்டுவதில் மலேசியாவிற்கு என்ன கவலை வேண்டி இருக்கு?. இதை முன் கூட்டியே சட்ட ரீதியில் கைபற்ற வேண்டிய அவசியம் என்ன?. பதில் வருமா, வராதா?. அன்வாருக்கு ஏதோ தெரியும் போல இருக்கு. அதனால்தான் பீடிகையுடன் கேள்விகளை தொடுக்கின்றார்!.
திரைமறைவில் எதோ நடக்குது அதுதான் என்னவென்று புரியவில்லை.
” பறந்தாலும் விட மாட்டேன் ” என்று பாட்டு பாடி கொண்டு தேடியதாம் நமது ஆகாயப் படை விமானங்கள்.
அதற்கு ” போடா போடா புண்ணாக்கு ; போடாதே தப்பு கணக்கு ” என்று MH 370 கண் இமைக்கும் நேரத்தில் அதிவேகமாக பறந்து சென்றதாம்.
நாட்டின் ஆளுமைத்திறனை உலகம் கண்டு “ஆ! இப்படியும் ஒரு கேடுகேட்ட நிர்வாகமா”? என்று கைகொட்டி சிரித்துவிடுமே என்ற பயம்தான். வேறெந்த காரணமும் இல்லை.
சாமி எனக்கு ஒரு உண்மை தெரியனும் வரும்காலத்தில் மலேசியா பாதுகாப்பற்ற நாடக மாறிவிடும் இந்த மண்ணில் அந்நிய நாட்டினரின் செயல் படு கேவலமாக இருக்கிறது கொலை கற்பழிப்பு கடத்தல் எல்லாம் அந்நியர்களின் செயல் பாடு அதிகம் அரசாங்கம் இதை கவனிக்குமா?அன்னியர்களிடமிருந்து இந்த நாட காப்பாற்றுங்கள்.