அன்வார் இப்ராகிம் சிலாங்கூரின் பொருளாதார ஆலோசகராக இருந்தாலும் நிர்வாக முடிவுகளைச் செய்வதில் அவருடைய மேலாதிக்கம் இல்லை என மந்திரி புசார் காலிட் இப்ராகிம் கூறினார்.
பொருளாதார ஆலோசகரிடமிருந்து ஆலோசனைகள் பெற்றாலும் மாநிலத் தலைவர் என்ற முறையில் தம்மால் செய்யப்படும் முடிவுகளுக்குத் தாமே பொறுப்பு என்றாரவர்.
“அவ்வப்போது கலந்து பேசுவோம். பிரதமர்கூட அவரின் ஆலோசகர்களுடன் கலந்து பேசுவதுண்டு. அதற்காக, அவரின் ஆலோசகர்கள் செய்யும் முடிவுகளை எல்லாம் அவர் அப்படியே பின்பற்றுவதில்லை”, என காலிட் இன்று மாநிலச் சட்டமன்றத்தில் கூறினார்.
எப்போதுமே கலந்துபேசுவது நல்லது. ஆனால், முடிவெடுப்பது நிர்வாகத் தலைவராகத்தான் இருக்க வேண்டும் என்றாரவர்.

























