ஒரே ஒரு நாள் நஜிப் குறைந்த-விலை வீட்டில் தங்குவாரா?

isu  மலேசியாவில்  சொத்துச்  சந்தையில்  விலைகள்  கிடுகிடுவென்று  உயர்கின்றன.  சொத்துக்களை  வைத்து  ஊக  வணிகம்  செய்வோர்  கொள்ளை  இலாபம்  பெறுகின்றனர்.  ஆனால்,  ஏழைகளோ  நன்கு  பராமரிக்கப்படாத  குறைந்த-விலை  அடுக்குமாடி  விடுகளில்  கொண்டு  போய்த்  திணிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையைக்  கவனப்படுத்துவதற்காக மலேசிய  சோசலிசக்  கட்சியும்(பிஎஸ்எம்) ஒரு  டஜன்  என்ஜிஓ-களும்  சேர்ந்து  ஒரு  இயக்கம் மேற்கொள்ளத்  திட்டமிட்டுள்ளன.

அதன்  தொடர்பில்  நடைபெற்ற  வட்டமேசை  கலந்துரையாடலில்  கலந்துகொண்ட  அனாக்  பங்சா  மலேசியாவின்  பேராளர்  ஜெயநாத்  அப்புதுரை,  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்குக்கே  சவால்  விடும்  துணிச்சல்  வேண்டும்  என்றார்.

பிரதமரைப்   பார்த்து  ஒரே  ஒரு நாள்  குறைந்த-விலை  அடுக்குமாடி  வீட்டில்  தங்கி  இருக்க  முடியுமா  என்று  கேட்க  வேண்டும். ரிம680  வருமானத்தைக்  கொண்டு  மாதம்  முழுவதும்  சமாளிக்கச்  சொல்ல  வேண்டும்  என்றார்.

மேல்தட்டில்  இருப்பவர்களுக்கு  வறுமை  என்றால்  என்னவென்று  தெரியாது,  அவர்கள்  அதை  விட்டு  வெகு  தொலைவில்  இருப்பவர்கள்.  அதுதான்  பிரச்னை  என  ஜெயநாத்  கூறினார்.