ஆழ்க்கடல் ஆய்வாளரும் திரைப்பட இயக்குனருமான ஜேம்ஸ் கேமருன், டைடேனிக் கப்பலின் உடைந்த பகுதிகளை ஆராய தமக்குப் பயன்பட்ட தொலைவிலிருந்து இயக்கப்படும் சிறு-ரக நீர்மூழ்கிச் சாதனங்கள் எம்எச்370-ஐத் தேடும்பணிக்கும் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
“கப்பலின் உடைந்த பகுதிகளை ஆராய நாங்கள் உருவாக்கிய ரோபோட்டுகள் பயன்படுமானால் அவற்றைக் கொடுத்துதவ தயார்”, என்றவர் புளும்பெர்க்கிடம் கூறினார்.
காணாமல்போன விமானத்தைக் கண்டுபிடித்தால் மட்டுமே அவை பயனாக இருக்கும் என்றாரவர்.
அவதார் வந்தால் கூட எங்களின் கப்பலை கண்டுபிடிக்க முடியுமா என்பது சந்தேகமே.. கடலில் சிக்கவில்லை, சூழ்ச்சியில் சிக்கியுள்ளது MH 370 என்பதே பலரின் கணிப்பாக இருக்கின்றது…
யு அர்ர் ரைட் தமிழ்ப்பெண்
ஆழ்கடலின் தேடும்வேலையில், கடத்தப்பட்டிருக்குமோ என்ற வேட்கையில் துப்பறிவு செய்வதும் நல்லதே!!!!