நான்கு தடவை கடலடிக்குச் சென்று தேடிப் பார்த்த தானியங்கி குட்டி நீர்மூழ்கிக் கப்பலான புளுஃபின்-21(ஏயுவி) அங்கு எம்எச்370 விமானம் இருப்பதற்கான தடயங்கள் எதையும் காணவில்லை. இன்று அது ஐந்தாவது கடலடிப் பயணத்தை மேற்கொண்டிருப்பதாக கூட்டு ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்தது.
புளுஃபின் மிக மெதுவாகத்தான் செயல்படும். இதுவரை 110 சதுர கிலோமீட்டர் பகுதியைத்தான் அதனால் தேடிப்பார்க்க முடிந்ததாக அம்மையம் கூறிற்று.
இதனிடையே, கடலின் மேற்பரப்பில், 51,870 சதுர கிலோமீட்டர் பகுதியில், 42வது நாளாக நடக்கும் தேடும்பணியில் 11 விமானங்களும் 12 கப்பல்களும் ஈடுபட்டுள்ளன.
மாற்றி,மாற்றி பேசி பட்ஜெட்டைஉயர்த்தி கடைசியில் மலேசிய அரசாங்கத்தின் கழுத்தை பிடிப்பீர்கள்அரசாங்கம் மக்களாகிய எங்கள் கழுத்தை பிடித்து உலுக்கும்,அந்த காணமல்போன விமானத்தில் 4டன் மங்குஸ்தீன் பழங்கள் ஏற்றப்பட்டதாக பேச்சு காற்று வாக்கில் வருதே !
இருக்கும் இடத்தை விட்டு விட்டு இல்லாத இடத்தில் விமானத்தை தேடுகிறார்கள் எப்படி கிடைக்கும் மலேசிய உட்பட உலக நாடுகள் பலவும் சேர்ந்து ஏமாற்றுகிறது இதில் பவபட்டவர்கள் மக்களே
கப்பல் கடலில் விழுந்திருந்தால்தானே கிடைபதற்கு?
நான் அன்றே சொன்னேன் ஒலித்து வைத்த கப்பலை எப்படி தேடுவதுஎன்று
கடலடித் தேடலில் பலனில்லை என்றால் கடத்தலடித் தேடலில் ஈடுபடுங்கள். பலன் கிடைக்கும்!