போலீஸ் காவலில் இறந்தவருக்கு 11-ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை

ulaga2003-இல்  போலீஸ்  காவலில்  வைக்கப்பட்டிருந்த  தம்  மகன் 19-வயது  உலகநாதன்  இறந்து  போனது  எப்படி  என்று   11 ஆண்டுகளாகக்  கேட்டுக்கொண்டிருக்கிறார்  அவரின்  தாயார். அந்தக் கேள்விக்கு  இன்றுவரை  பதில்  இல்லை.

போலீசால்  உலகநாதனின்  கொலையாளிகளையும்  கண்டுபிடிக்க  முடியவில்லை, இறப்புக்கான  காரணத்தையும்  சொல்ல  முடியவில்லை  என்று  கண்ணீர்  மல்கக்  கூறினார்  தமிழ்ச்செல்வி,63.

குற்றம் புரியாத  உலகநாதனைத்  தவறுதலாக  தடுத்துவைத்ததற்கு  இழப்பீடாக  வெளியில்  அறிவிக்கப்படாத  ஒரு  தொகையை  இழப்பீடாகக்  கொடுக்க  அரசு  முன்வந்தது.

அதுவும்  மனித  உரிமை   போராட்ட  அமைப்பான  சுவாராமும்  மலேசிய  வழக்குரைஞர்  மன்றமும்  போலீசுக்கு  எதிராக  வழக்கு  தொடுத்த  பிறகுதான்  இழப்பீடு  கொடுக்க  முன்வந்தார்கள்.

“என்  நிலைமை  வேறு  யாருக்கும்  வர  வேண்டாம்”,  என்று  அத்தாயார்,  சீன  அசெம்ப்ளி  மண்டபத்தில்  நடைபெற்ற  ஒரு  நிகழ்வில்  அழுதுகொண்டே  கூறினார்.

உலகநாதனின்  இறப்புச்  சான்றிதழ், போலீசுக்கும்  சிறை அதிகாரிகளுக்கும்  சட்ட  நடவடிக்கையிலிருந்து  பாதுகாப்பு  அளிப்பதுபோல், அவர்  ‘அடையாளம் காணப்படாத  காரணங்களால்’  ஊயிரிழந்ததாகக்  குறிப்பிடுகிறது.