பிள்ளை பராமரிப்பை ஷியாரியா நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும்

musaதேசிய  ஷியாரியா  வழக்குரைஞர்  சங்கம் (பிஜிஎஸ்எம்),  எஸ்.தீபா, முஸ்லிமாக  மாறிய  இஸ்வான்  அப்துல்லா  ஆகியோரின் வயது  வராத  பிள்ளைகளை  யாரின்  பராமரிப்பில்  விடுவது  என்பதை  முடிவு  செய்ய  வேண்டியது  ஷியாரியா  நீதிமன்றமே  தவிர  சிவில்  நீதிமன்றம்  அல்ல  என்று  கூறுகிறது.

“பெற்றோரில்  ஒருவர்  இஸ்லாத்துக்கு  மாறினாலும் 18வயதுக்குக்  குறைந்த  பிள்ளைகளின்  சமயம்  இயல்பாகவே  இஸ்லாம்  என்று  ஆகிவிடும்”, என்று  அதன்  தலைவர்  மூசா  ஆவாங்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.