கர்பாலுக்கு இறுதி மரியாதை தெரிவிக்க ஆயிரக்கணக்கானோர் கூடினர்

funeralகாலஞ்சென்ற கர்பால்  சிங்குக்கு மரியாதை  தெரிவிக்க மலேசியர்கள்  ஆயிரக்கணக்கில் இன்று  டேவான்  ஸ்ரீ   பினாங்கில்  கூடினர்.

காலை  மணி  7.30க்கே  டேவானில்  கூட்டம்  நிரம்பி  வழிந்தது. 8.15 அளவில் கர்பாலின் பிண  ஊர்வலம்  டேவான்  ஸ்ரீ  பினாங்  வந்துசேர்ந்தது. அவரது  நல்லுடல்  டேவானுக்குள்  எடுத்துச்  செல்லப்பட்டு  பொதுமக்கள்  இறுதி  மரியாதை  தெரிவிக்கக்  கிடத்தி  வைக்கப்பட்டது.

பின்னர், டிஏபி  கட்சி  உறுப்பினர்களும்  பொதுமக்களும்  டேவானுக்குள்  அனுமதிக்கப்பட்டனர்.  பலர்  கர்பாலின்  உடலை  வலம் வந்து  பிரார்த்தனை  செய்தனர்.இன்னும்  பலர்  மலர்களை  வைத்து  அஞ்சலி  செலுத்தினர்.

கூட்டத்தில்  பினாங்கு  முதல்வர்  லிம்  குவான்  எங்,  அவரின்  தந்தையும்  டிஏபி  மூத்த  தலைவரிமான  லிம்  கிட்  சியாங்,  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  முதலானோரைக்  காண  முடிந்தது.

காலை  ,மணி   10.30  அளவில்,  டேவான் ஸ்ரீ  பினாங்கில்,  பினாங்கு  ஆளுநர்  அப்துல்  ரஹ்மான்  அப்பாஸ், கர்பாலுக்கு  இறுதி  மரியாதை  தெரிவித்துக்கொண்டார்.

11.50க்குச்  சவ  ஊர்வலம்  டேவான்  ஸ்ரீ  பினாங்கிலிருந்து  பத்து  கந்தோங்கை  நோக்கிப்  புறப்பட்டது.  பிற்பகல் 1 மணி  அளவில்  அவரது  உடல்  தகனம்  செய்யப்படும்.