கிள்ளான் பள்ளத்தாக்கில் அமல்படுத்தப்பட்டிருக்கும் நீர்ப் பங்கீட்டைக் கட்டம்கட்டமாக நீக்குமாறு எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், நீர்வள அமைச்சு சிலாங்கூர் அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
சிலாங்கூரில் பல அணைக்கட்டுகளில் நீர்மட்டம் பாதுகாப்பான அளவுக்கு உயர்ந்திருப்பதாக துணை அமைச்சர் மாட்சிர் காலிட் கூறினார்.
“கிள்ளான் கேட்ஸில் நீரின் அளவு 53.99 விழுக்காடு இருப்பதாகவும் சுங்கை அணைக்கட்டில் 50 விழுக்காட்டுக்குமேல் உயர்ந்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளதால் சிலாங்கூர் அரசு கட்டம்கட்டமாக நீர்ப் பங்கீட்டை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று நினைக்கிறேன்.
“நீர்ப் பங்கீட்டை நீக்கும் அதிகாரம் சிலாங்கூர் மந்திரி புசாருக்குத்தான் உண்டு”, என்றாரவர்.
சிலாங்கூர் அரசு, மழையை மட்டும் நம்பி இருக்கக் கூடாது. மாற்றுவழிகளையும் நாட வேண்டும் என்று மாட்சிர் குறிப்பிட்டார்.