பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், விரைவில் தீவகற்ப மலேசியாவில், இரண்டு மாநில மந்திரி புசார்களை மாற்றப்போகிறார் என அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.
அச்செய்தித்தாளில் ஆவாங் செலாமாட் என்னும் புனைப்பெயரில் எழுதும் பத்தி எழுத்தாளர், அவர்களுக்குப் பதிலாக மந்திரி புசார் பொறுப்புகளை ஏற்பதற்கு சிலர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் கூறினார். ஆனால், எந்த மாநில மந்திரி புசார்கள் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
திரங்கானு மற்றும் பஹாங் மந்திரி புசாராக இருக்கலாம்.( பெர்லிஸ் ) போனசாக இருக்கலாம்.
சும்மா ஒரு அதிரடி மாற்றமாக ம.இ.கா. காரர்களுக்குக் கொடுத்தால் என்ன! இதை விட பெரிய மாற்றம் என்ன வரப்போகிறது!
1மலெசியா …….ஒரு இந்திய மலேசியனுக்கு மாநில மந்திரி புசார் பதவி கொடுத்தால் சந்தோசம் தானே?சட்டத்தில் இடம் உண்டா?
ஒரு மாநிலம் குட்டிச்சுவராக போவதற்கா மா.இ.காரன்களுக்கு மந்திரி புசார் கேட்கின்றீர்கள்…
சட்டத்தில் இடம் இல்லை என்றால் சட்டத்தை மாற்றலாம்! இது இஸ்லாமிய நாடு அல்ல என்பது சட்டம். சட்டத்தையே மாற்றாமல் இஸ்லாமிய நாடு என்கிறார்களே! இது முடியும் என்றால் அதுவும் முடியும்!