மலேசிய ஆகாயப்படை அதிகாரி ஒருவர், மலேசியாவுக்குத் திரும்பும் வழியில் ஒரு துப்பாக்கியைக் கடத்த முயன்றதற்காக அமெரிக்காவின் டெக்சாஸில் கைது செய்யப்பட்டார்.
மேஜர் முகம்மட் பைஸ் அப்துல் ஜலில், Taurus PT-22 ரக துப்பாக்கியைப் பகுதி பகுதியாக பிரித்து தம் பயணப்பையில் பல இடங்களில் மறைத்து வைத்துக் கடத்த முயன்றார் எனப் அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக டெக்சாஸின் BigCountryHomepage.com கூறியது.
ஆகாயப் படை பயிற்சிக்காக ஜனவரியில் அமெரிக்கா சென்றார் முகம்மட் பைஸ். இவ்வழக்கில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் 10ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்
10ஆண்டுவரை சிறை போதது தொகில் போடணும்.
மலேசியாவில் இது எல்லாம் சாதாரணமப்பா! மேஜர் அவர்கள் மலேசியாவில் பணி முடிந்து இல்லம் திரும்பும் போது தனக்கு வழங்கப்பட்ட ஆயுதத்தை தன்னுடன் வீட்டிற்கு கொண்டு செல்வாரோ? பாவம். அவரை விட்டு விடுங்கள். அமெரிக்கா சட்ட திட்டங்கள் ஆங்கில மொழியில் இருப்பதால் சரியாக விளங்கவில்லை என்று நினைக்கிறேன். மற்ற நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் நாம் நாட்டு அதிகாரிகள் போல் தான் இருப்பார்கள் என்று கருதி விட்டார் போலும். – “மலேசியா போலே”
இதெல்லாம் குற்றமில்லை என்பது அம்னோவுக்குத் தெரியும். தனது பிரதிநிதியை வழக்கைக் கண்காணிக்க அனுப்பிவைப்பார்கள். இஸ்லாமிய நாடுகளில் இது போன்ற குற்றச் செயல்கள் நடப்பதில்லை!
உங்களுக்கு இன்னும் என்னடா வேண்டும்? இந்த நாட்டில் எல்லாம் சலுகைகளுடன் வாழும் நீங்கள் இதுபோன்ற காரியங்கைளை செய்வதின் வழி நீங்கள் வ்டி கட்டுன முட்டாள்கள் என்று மறுபடியும் உலகிற்கு அறிய செய்து இருக்கீர்கள்.
அங்கே சட்டம் டபுள் ஸ்டாண்டர்ட் இல்லை என்பதால் உமக்கு சரியான தண்டனை கிடைக்கும் .உனக்கு ஏன் இந்த வேலை .
ஒரு மேஜரே இப்படி என்றால்…, மற்ற அதிகாரிகள் எப்படியோ ??????????!!!!!!!!!!! வாழ்க 1 மலேசியா !!!!
நம் நாட்டில் உலவும் கள்ள துப்பாகிகளுக்கும் மலேசிய ஆகாயப்படைக்கும் எதோ தொடர்பு உள்ளதுபோல் தெரிகிறது.
அரைவேக்காடுகள் வேறு எப்படி? இதே நிலை தான் நாடுமுழுக்க— எல்லா நிலையிலும். நாஜிப் மட்டும் என்ன? SCORPENE விவகாரம்?
எல்லாம் தரத்துடன் இருந்தால் இந் நாடு இந் நிலையில் இருக்காது.
இப்பத்தான்யா தெரியுது, நம் நாட்டிலே ஏன் இந்த அளவுக்கு துப்பாக்கிகள் உலவுதுன்னு.
அங்கேயே சாகட்டும்..