எம்எச்370 இந்தியப் பெருங்கடலில் விழவில்லையா?

iataஆறு வாரங்கள்  தேடியும் எம்எச்370  தொடர்பில்  சிறு  தடயம்கூட  கிடைக்காத  நிலையில்  சரியான  இடத்தில்தான்  தேடுகிறோமா  என்ற  சந்தேகம்  எழுந்துள்ளது.

அதனால் தேடும்பணியை  முதலிலிருந்தே  தொடங்கலாமா  என்று  ஆலோசிப்பதாக  அனைத்துலக  விசாரணைக்  குழு (ஐஐடி) வட்டாரத்தை  மேற்கோள்காட்டி  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  அறிவித்துள்ளது. அந்த  போயிங்  777  இதுவரை  எண்ணிக்கொண்டிருந்ததுபோல  இந்தியப்  பெருங்கடலின்  தென்பகுதியில்  விழவில்லையோ  என்ற  ஐயப்பாடும்  எழுந்துள்ளது.

“அடுத்த  சில  நாள்களில்  முடிவு  எதுவும்  தெரியவில்லை  என்றால்  இந்தச்  சாத்தியத்தையும  ஆலோசிக்க  வேண்டியிருக்கும்……அதேவேளையில்  இந்தியப்  பெருங்கடலில்  நடக்கும்  தேடும்பணியும்  தொடர  வேண்டும்.

“எம்எச்370-உடன்  தொடர்புடைய சிறுபகுதிகூட  கண்டுபிடிக்கப்படாத  நிலையில், அது  வேறு  எங்காவது இறங்கியிருக்கும்  சாத்தியத்தையும்  மறுப்பதற்கில்லைதான்.

“ஆனால்,  20 நாடுகள்  அந்த  விமானத்தைத்  தேடிக் கொண்டிருக்கும்போது  ஏதாவது  ஒரு  நாடு  அதை  மறைந்துவைத்திருக்கும்  சாத்தியம் உண்டு  என்பதே  அபத்தமாக  தெரிகிறது”,  என்று  அந்த  ஐஐடி  வட்டாரம்  அந்த  நாளேட்டிடம்  தெரிவித்தது.