தாம் பிகேஆர் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும்கூட அப்பதவிக்குப் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களான அஸ்மின் அலியுடனும் சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிமுடனும் சேர்ந்து பணியாற்றுவதில் எந்தப் பிரச்னையும் இராது எனத் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கூறினார்.
எதிர்வரும் கட்சித் தேர்தலில் மூவரும் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டாலும் தங்களால் எதையும் மனம்விட்டுப் பேச முடியும் என்பதை சைபுடின் வலியுறுத்தியதாக சினார் ஹரியான் கூறுகிறது.
“கொள்கைகள் விசயத்தில் ஏதாவது கருத்துவேறுபாடு இருக்குமானால் அதை அப்துல் காலிட்டிடம் நேரடியாக தெரிவிப்பேன். அது அவருக்கும் தெரியும்”, என்றாரவர்.
அதேபோல் அஸ்மினும் தாமும் தொடக்கநாளிலிருந்தே பிகேஆர் திட்டங்களில் ஈடுபட்டு வந்திருப்பதால் ஒருவரை மற்றவர் நன்கு புரிந்து வைத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
அப்புறம் என்ன? எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது! “இணைந்து பணிபுரிய” ஏன் இங்கு வந்தது!