ஆங்கில, மலாய் நாளேடுகளின் முகப்புப் பக்கத்தில் கர்பாலுக்கு இடமில்லை

papersநேற்றுத்தான்  காலஞ்சென்ற புக்கிட்  குளுகோர்  எம்பி,  கர்பால்  சிங்கின்  இறுதி  ஊர்வலம்  பினாங்கில்  நடந்து  முடிந்திருக்கிறது. நாடே  உற்றுக்  கவனித்த மிகப்  பெரிய ஊர்வலம்  அது.  ஆனால்,  இன்றைய ஆங்கில,  மலாய்  நாளேடுகள்  அது  முதல்பக்கச்  செய்தி  அல்ல  என்பதுபோல  நடந்து  கொண்டிருக்கின்றன. ,

சீன நாளேடுகள்  அதற்கு  மிகுந்த  முக்கியத்துவம்  கொடுத்து  முதல்  பக்கத்தில்  வெளியிட்டுள்ளன.

ஆனால், பிஎன்  தொடர்புள்ள  நியு  ஸ்ட்ரேட்ஸ்  டைம்ஸ்,  த  ஸ்டார்,  உத்துசான்  மலேசியா,  பெரித்தா  ஹரியான்  ஆகியவை  அதைக் கண்டுக் கொள்ளவில்லை.

பெரித்தா  ஹரியான், பினாங்கில்  போதைப்  பொருள்  விருந்தில் கலந்துகொண்ட  88 பேர்  தடுத்து வைக்கப்பட்ட  செய்தியை  முதல்பக்கச்  செய்தியாக  போட்டிருந்தது.

உத்துசான்,  அண்மையில்  நிகழ்ந்த  பேருந்து  விபத்துக்கு  முக்கியத்துவம்  கொடுத்திருந்தது.

இதற்குமாறாக,  சீனமொழி  நாளேடுகள்  முகப்பிலும்  உள்பக்கங்களிலும்  கர்பால்  இறுதி  ஊர்வலம்  பற்றிய  படங்களையும்  செய்திகளையும்  நிறைய  வெளியிட்டிருந்தன.

தமிழ்  நாளேடுகளான  மலேசிய  நண்பன்,  மக்கள்  ஓசை  ஆகியவையும் பெரிய,  பெரிய  படங்களையும்  செய்திகளையும்  போட்டிருந்தன.