பினாங்கில் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதி பற்றி விவாதிக்க தேர்தல் ஆணையம்(இசி) வியாழக்கிழமை சிறப்புக் கூட்டம் நடத்தும்.
கர்பால் சிங் காலமானதை அடுத்து அத்தொகுதி காலியானதைத் தெரிவிக்கும் மக்களவைத் தலைவரின் கடிதம் காலை 11 மணிக்குக் கிடைத்ததாக இசி செயலாளர் அப்துல் கனி சாலே கூறினார்.
கூட்டம் புத்ரா ஜெயாவில் நடைபெறும் எனவும் அதன்பின்னர்
இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் செய்தியாளர் கூட்டமொன்றைக் கூட்டுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
2013 பொதுத் தேர்தலில் அத்தொகுதியில், பாரிசான் நேசனலின் தே பெங் இயமை 41,778 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்து வெற்றி பெற்றார் கர்பால்.
இந்த தொகுதியில் 100% ஓட்டு எதிர் கட்சிக்கே அதனால் பணம் விரயம் செய்யாமல் புத்திசாலிதனமாக நடத்து கொள்ளவேண்டும் இ சி .
ஒரு ம.இ.கா.ரானைப் போடுங்கப்பா! தோற்றுப் போனா ஏதாவது ஒரு செனட்டர் பதவியாவது அவனுக்குக் கிடைக்கும்!