எம்எச்370-ஐத் தவறான இடத்தில் தேடுகிறார்கள் என்று கூறும் கூட்டத்தாருடன் ஜெர்மனியின் பியோமார் ஹெல்ம்ஹோல்ட் ஆழ்க்கடல் ஆராய்ச்சி மைய நிர்வாக இயக்குனர் பீட்டர் ஹெர்ஜிக்-கும் சேர்ந்து கொண்டிருக்கிறார் என புளும்பெர்க் செய்தி தெரிவிக்கிறது.
ஏப்ரல் 5-இலும் ஏப்ரல் 8-இலும் கேட்கப்பட்ட பிங் ஒலிகள் விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து வந்ததாக நம்பி பெரும் நம்பிக்கை கொண்டிருப்பது பற்றி எச்சரித்த அவர், அந்த ஒலிகள் வேறு இடங்களிலிருந்தும் வந்திருக்கலாம் என்றார்.
இத்தனை விமானங்களும் கப்பல்களும் வலைவீசி தேடும்போது ஒரு தடயம்கூட கிடைக்காதது அதிசயமாக இருக்கிறது என்றாரவர்.
இதனிடையே இந்தியப் பெருங்கடலில் வெப்பமண்டல சூறாவளியான சைக்ளோன் ஜேக் வீசுவதால் விமானங்களின் தேடும்பணி இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக கூட்டு ஒருங்கிணைப்பு மையம் அறிவித்தது.
ஆமாம். அதுக்கும் அன்வரே காரனமாய் இருப்பார் என்றும் நம் நாட்டுத் தலைவர்கள் சொல்லலாம்.
ஒன்னு நல்லா தெரியுதுப்பா இல்லாத இடத்தில் தேடரிங்கனு !
இதைதான் ஆரம்பத்திலிருந்து சொல்கிறோம், என்ன செய்வது, எங்க நாட்டு கேனையன்களுக்கு புரியவில்லையே !!!
சீனர்கள் பிங் போங் விளையாட்டில் பலே கில்லாடிகள்! அதன் ஒலியாகக் கூட இருக்கலாம்!