பினாங்கு நீர் விநியோக கார்ப்பரேஷன் (பிபிஏபிபி) மாநிலத்தில் நீர்ப் பங்கீட்டைக் கொண்டுவந்தால் “பல தலைகள் உருளும்” என முதலமைச்சர் லிம் குவான் எங் எச்சரித்துள்ளார்.
“ தண்ணீர் கட்டணத்தை உயர்த்தும் முடிவு ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருந்தாலும் மாநில அரசு அதை அனுமதித்துள்ள வேளையில் நீர்ப் பங்கீட்டைக் கொண்டு வந்தால் தலைகள் உருளும் என(பிபிஏபிபி பொது நிர்வாகிக்கு) தெரியப்படுத்தி இருக்கிறோம்”, என லிம் ஓர் அறிக்கையில் கூறினார்.
பிபிஏபிபி பொது நிர்வாகி ஜசெனி, மழை போதுமான அளவில் பெய்யாததாலும் அணைக்கட்டுகளில் நீரின் அளவு குறைந்து போனதாலும் நீர்ப் பங்கீடு செய்ய வேண்டிய நிலை உருவாகலாம் என ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தார்.
நீயுமா?????
அரசாங்க அதிகாரிகளின் பொறுப்பற்றத் தனம் தான் இந்தப் நீர்ப் பங்கிடு. நிச்சயமாக தலைகள் உருள வேண்டும்!