கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை அமல்படுத்தவும் அதற்காக நாடாளுமன்றத்தில் தனி உறுப்பினர் சட்டவரைவு ஒன்றைக் கொண்டுவரவும் பாஸ் திட்டமிட்டிருப்பதற்கு சீன என்ஜிஓ-களின் கூட்டமைப்பு ஒன்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
மலேசியா சமயச் சார்பற்ற நாடு என்பதைக் கூட்டரசு அரசமைப்பு தெளிவாக எடுத்துரைக்கிறது என்றும் அதை 1988ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தியது என்றும் அந்த 22 என்ஜிஓகளும் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தன.
“அந்தச் சட்டவரைவை மீட்டுக்கொள்ள வேண்டும் எனவும் மலேசியாவின் பல்லின கலாச்சாரத்துக்கும் இங்கே உள்ள பல சமயங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் பாஸைக் கேட்டுக்கொள்கிறோம்”, என்று அவை கூறின.
ஹுடுட் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் என்றாலும் அதனால் முஸ்லிம்-அல்லாதார் சிக்கல்களையும் தேவையில்லாத விளைவுகளையும் எதிர்நோக்கலாம்.
இல்லாத ஊருக்கு பாஸ் கட்சி வழி கோலுகின்றது. சரியா நீதிமன்றத்தில் இருக்கும் குடும்ப விவகார வழக்குகளிலியே நம்பிக்கை இழந்து நிற்கும் பல தாய்மார்களுக்கு அரசாங்கமே உதவித் தொகை கொடுத்து நீதியை நிலை நாட்ட வேண்டிய அவதியில் உள்ளது. இதில் வேற இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை அமூலாக்க வேண்டும் என்பது மலேசியாவை தாலிபான் நிலைக்கு கொண்டுச் சென்று விடும் என்று சொல்லியாத் தெரிய வேண்டும். சொல் பேச்சி கேட்காமல் பாஸ் கட்சி நடந்தால் அடுத்த தேர்தலில் மண்ணை கவ்வி பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை வரும் அப்ப அம்னோகாரன் கை கொடுக்க மாட்டான். கை கொட்டிச் சிரிப்பான்.
சீனன் எதிர்ப்பு கொடுக்க கிளம்பிட்டான் ! இந்திய கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கிறது ? பாஸ் கட்சியில் உலாமா non உலாமா இரு பிரிவு உள்ளது !அங்குதான் பல குளறுபடி !
ஹுடுத் சட்டத்தை அம்னோவே விரும்பாது காரணம்,பலஅம்னோ தலைவர்களுக்கு கையும்,காலும்இல்லாத ஊனமுற்றவர்களாக இருப்பார்கள்!