பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹரோம், இறந்துபோனவர்கள் மற்ற சமயத்தாராக இருந்தாலும் அவர்களுக்கு முஸ்லிம்கள் மரியாதை காண்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
“மனிதர்கள் என்ற முறையில் நாம் ஒருவரை மற்றவர் மதிக்க வேண்டும்…….இறப்பு போன்ற விவகாரங்களில் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பது நல்லுறவைக் கட்டிக்காக்க உதவுகிறது”, என்றாரவர்.
கர்பால் சிங்கின் இறப்பின்போது பிஎன்னின் லங்காவி எம்பி நவாவி அஹ்மட்டும் முன்னாள் ஷா ஆலம் பிஎன் வேட்பாளர் சுல்கிப்ளி நூர்டினும் தரக்குறைவாக கருத்துக்கள் வெளியிட்டிருந்தது குறித்து கருத்துக் கேட்கப்பட்டதற்கு ஜமில் இவ்வாறு கூறினார்.
ஆனால், அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது தமக்குத் தெரியாது என்பதால் அது பற்றிக் கருத்துரைக்க அவர் மறுத்தார்.
நவாவி, தாம் பதிவிட்ட கருத்துக்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சுல்கிப்ளி- பலரும் தம் கருத்துக்களைக் கண்டித்ததை அடுத்து- கர்பாலைப் புகழ்ந்து பேசலானார்.
முஸ்லிம்கள் சரியாகத் தான் இருக்கிறார்கள். அம்னோ அரசியல்வாதிகளுக்குத் தான் இஸ்லாமிய அறிவு போதவில்லை! காலிப் போத்தல்கள்!
அமைச்சரே! முஸ்லிம்களுக்கு ஞாபகப் படுத்தியதற்கு நன்றி!
இந்த நாட்டில் ஆண்டிக்கு ஒரு சட்டமும் அப்துல்லா விற்கு ஒரு சட்டமும் இருக்கும் போது எப்படி நாடு உருப்படும் !
மதம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை .மனிதன் என்று தன்னை நினைக்கும் ஒவ்வொருவருவரும் மற்ற மனிதன் இறக்கும்போது ,இரக்கம் சிறிதளவாவது இருக்கவேண்டும் .
இல்லை எனில் அவன் மிருகத்திற்கு சமம்.
உங்க மதம் தான் உலகதிலே சிறந்த மதம் ,,,,,,,,,,,மற்ற எல்லாம் ???????????? ,,,,,,,,,,உங்கள் முகங்களில் தாண்டவம் ஆடும் தெய்வீக கலை யாருக்கு வரும் …………பார்க்கும் போது வணங்க தோணும் அப்படி ஒரு தேஜஸ் ,,,,,,,,,,,,
பண்புள்ள மக்களுக்கு இதுபோன்ற மனிதாபிமான விபரங்களைக் கூட ஞாபகப் படுத்த வேண்டிய நிலைக்கு நாட்டை மிக2 கீழ் நோக்கி இழுத்து சென்றுவிட்டர்களே இந்தப் பாவிகள். சொர்க்கத்தில் இடம் கிடைக்குமா இவர்களுக்கு?! எல்லாம் மகாதிர் போட்ட விசவிதை; இப்போது அறுவடை ஆகிறது. மதம் என்பது நல்ல, மேன்மையான, மனிதாபிமானமிக்க, பண்புள்ள நடத்தை; சும்மா வணங்குவதும், பேசுவதும் மட்டும் அல்ல. எல்லா மதத்திற்கும் இதுதான் அடிப்படை உண்மை என்பது எனது கருத்து. இதை உணர்ந்தால் உலகில் சாந்தி, சமாதானம், பரஸ்பர சுமூகநிலை உண்டாகும். இறைவன் செய்ய வேண்டிய judgement வேலையை சிலர் அவரிடமிருந்து பிடுங்கி செய்வதால் வரும் வினை இது.
”இறந்துபோனவர்கள் மற்ற சமயத்தாராக இருந்தாலும் முஸ்லிம்கள் மரியாதை காண்பிக்க வேண்டும்” நீங்கள் சொல்லும் இந்த வாக்கியத்தை எல்லா மசூதிகளிலும் எழுதி வையுங்கள் அமைச்சரே !
நல்ல மனித பண்புகளே, நல்ல சமயம்….
இறந்து போனவர்கள் மட்டும் அல்ல, உயிருடன் இருக்கும் எல்லா மனிதரிடமும் சமய வேறுபாடு இன்றி மரியாதை காண்பிக்கவேண்டும். அது மனிதாபிமானம். அதுவே இறைவனின் அவா. சமய வேறுபாடின்றி மனிதாபிமானம், இரக்கம், பரோபகாரம், சகோதரத்துவம், பரிவு, பரஸ்பர மரியாதை, நியாயம் கருதி விட்டுக்கொடுத்தல், மற்றவர் துன்பத்தில் பங்குகொள்ளல் போன்ற நன்நெறிகளை புத்தம், கிறிஸ்துவம், சைவம், ஜைனம்
போன்ற சமயங்கள் நிறைய வலியுறுத்துகின்றன. பல மதங்கள் எல்லா மானிடர்களையும் (சமய வேறுபாடின்றி) நமது சகோதரர்களாகப் பார்க்கவேண்டும் என அறிவுறுத்துகின்றன. நாம், எந்தக் காழ்ப்புமின்றி அதனை கடைப்பிடிக்கிறோமா? பெரும்பாலும் நாம் சமயங்கள் சொல்லும் நன்நெறிகளை பேணுவதில்லை. ஆனால் நமது மதத்தினை யாராவது சற்று குறை கூறினாலும் குதித்து எழுகிறோம் – நமது இறைவனை “மகிழ்விக்க”…!! இறைவன் என்ன படிக்காத பாமரனா இதுபோன்ற “குதித்தல்களில்” ஏமாறுவதற்கு?
உலகதிலேயே இவர்கள் தான் பண்புடனும் ஒழுக்கத்துடனும் வாழ்கிறார்களா என்ன? உண்மையை சொல்லப்போனால் தரம் கேட்டா இவர்கள்.எதற்க்கெடுத்தாலும் மற்ற மதத்தை பற்றி பேசிக்கொண்டிருப்பதே இவர்களின் குணம்.எதோ இம்மண்ணில் இவர்கள் தான் புனிதர்கள் என்ற நினைப்பு.
எண்டா மதம் மதம் என்று மதவெறி பிடித்து அலைகிறிர்கள்? அட கடவுளே!!!!!!
எந்த மதமும் தவறான வழிமுறைகளை போதிப்பது கிடையாது . இஸ்லாம் மதம் ஒரு நல்ல மதமே, அதை பின்பற்றும் இனம்தான் சரியாக புரிந்துகொள்வதில்லை. இஸ்லாம் ஒன்றும் மலாய்காரர்களின் சொத்து அல்ல !! ஒரு நல்ல முன்மாதிரியான மதத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் – இந்த அரை வேக்காடு மலாய்காரர்கள். சரவாக் முஸ்லிம்கள் எப்படி மற்ற இன மக்களுடன் சகோதரர்கள் போல் பழகுகிறார்கள். UMNO காரன்தான் எல்லோரையும் பிரித்து, பிரிந்து வாழ கோடுபோடுகிறான்!
முஸ்லிம்கள் மட்டும் இப்படிப்பட்ட பகுத்தறிவுக்கு ஒவ்வாத வாதமிடுவார்கள்.ஆண்டவன் மடையன் அல்ல அவனுக்கு எல்லாம் தெரியும்–ஆண்டவன் என்றொருவன் இருந்தால்.அப்படி ஆண்டவன் என்றொருவனிருந்தால் அவனுக்கு எல்லாரும் ஒன்றே–ஆண்டவன் என்றுமே அவன் துதி பாட சொன்னதில்லை. துதிபாடுதல் மனிதனின் அறிவின்மை.- ஆண்டவனுடையதல்ல.
எல்லா சமயங்களும் புனிதமானவையே, ஆனால் தங்கள் சொந்த நன்மைக்காக மக்களை தவறாக வழி நடத்தி செல்பவர்கள் சில அரசியல்வாதிகளே.
அம்னோ ஆட்சியாளர்களால் விதைக்கப்பட்ட இனவெறியை, இறப்பிலும் வெளிப்படுத்தும் கீழ்த்தரமானவர்கள் நிறையவே உள்ளார்கள் !