எம்எச்370-இன் தேடும்பணி ஒருங்கிணைக்கப்படும் பெர்த் நகருக்குச் செல்லத் திட்டமிடுவதாக இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.
“அது பற்றி (கூட்டு ஒருங்கிணைப்பு மையத் தலைவர்) ஆங்குஸ் ஹூஸ்டனுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். ஒருவேளை புளுபின் மிச்சமுள்ள 20 விழுக்காட்டு தேடலையும் முடித்த பிறகு செல்லக்கூடும்”, என்றாரவர்.
மேலும், காணாமல்போன எம்எச்370-யைத் தேடும்பணியில் உதவும் நிபுணர்களுக்காக “சல்லிக்காசு:” கூட செலவிடவில்லை என்றும் அமைச்சர் டிவிட்டரில் கூறி இருந்தார். எல்லாருமே தன்னார்வத்துடன் உதவுகிறார்கள்.
நிபுணர்கள் சல்லிக்காசு கூட வாங்கவில்லை. நன்றி! ஆனால் நீங்கள் நிபுணர்கள் அல்லவே! இதையே சாக்காக வைத்து சாக்கு சாக்காகச் சல்லிக்காசுகளைச் சேர்த்திருப்பீர்களே!
இவன் சொல்வதை எல்லாம் கேட்டால் நம் அறிவு மழுங்கிடும். அரைவேக்காடுகள்.
மக்கள் பணத்தை விரயமாக்கிவிட்டு கடைசியில் மக்கள் தலையிலேயே மிளகாய் அரைக்காமல் இருந்த சரி.
நாம் சொல்லும் உண்மைகளை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று தெரிந்து , இப்போது பொய்யை சொல்கிறார் போலிருக்கிறது.