புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற கோரிக்கையை பிஎன் ஏற்காது. அங்கு வேட்பாளரைக் களமிறக்கப் போவதை மசீச உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால், வேட்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என மசீச உதவித் தலைவர் சுவா டீ யோங் தெரிவித்தார். கர்பால் சிங் காலமானதால் அத்தொகுதி காலியாகியுள்ளது.
“அவசரமாக முடிவு செய்ய வேண்டியதில்லை”, என்றவர் கூறியதாக நியு ஸ்ட்ரேய்ட்ஸ் டைம்ஸ் அறிவித்துள்ளது.
இது இவ்வாண்டு மசீச போட்டியிடும் இரண்டாவது இடைத் தேர்தலாக இருக்கும். இதற்குமுன் மார்ச் மாதம் அது காஜாங்கில் போட்டி இட்டது. காஜாங், புக்கிட் குளுகோர் இரண்டுமே பக்காத்தான் ரக்யாட் கோட்டைகளாகும்.
களமிறக்கப் போகும் ம.சீ.ச. வேட்பாளர் டி.ஏ. பி. க்கு ஓட்டுப் போடாமல் இருந்தால் சரி!
பாகத்தான் ராக்யாட் கொடைனு தெரிந்து அங்கு ஏன் மக்கள் பணத்தை வீண் விரயம் செய்யவேண்டும் ,காஜாங் இடை தேர்தலில் 16லட்சம் செலவு ,அப்போ அங்கே 32லட்சம்மா?எம் எச் 370 எத்தன கோடி இன்னும் தெரியவில்லை?
இன்னும் ஒரு தோல்வியை சந்திக்க தயராக இருங்கள்
ம.சீ. ச.வை குறைவாக எடைப்போட்டு விடாதீர்கள். 5-5-2013ல் நடைப்பெற்ற பொதுத்தேர்தலில், டி.எ.பி. யின் கர்ஜிக்கும் சிங்கமான கர்ப்பாலை எதிர்த்து போட்டியிட்ட ம.சீ.ச. வேட்பாளரான தே பெங் யாம் என்பவர் 14,061 வாக்குகள் பெற்றார். இவ்விடைத்தேர்தலில் கர்ப்பாளுக்கு நிகரான ஒருவரா களத்தில் இறங்கப் போகிறார்?
வாழ்த்துக்கள் ….
கர்பால் இடத்திற்கு யார் எதிர்த்து போட்டி போட்டாலும் மண்ணை கௌவுவது உறுதி. அது DAP மற்றும் PR கோட்டை என்பதை மறந்து விட வேண்டாம்.
பி என் மண்ணைக் கவ்வுவது திண்ணம்….!!!!!
தோல்வியோ, வெற்றியோ. மக்களின் வரியை கொள்ளையடிப்பதற்கு இதுவும் ஒரு வழி.தோல்வி அடைவது உறுதி என்று தெரிந்தும் தேசிய முன்ணனி தன் வேட்பாளரை களம் இறக்க தயாராக உள்ளது.காரணம் மக்கள் செலுத்தும் வரி தேசிய முன்ணனி பணம், எவருடைய கேள்விக்கும் அவர்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆணவத்தினால் ஆடியவன் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை. அம்னோ மயம்!