மே1 ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணி பொது ஒழுங்குக்கு மிரட்டலாக இருக்கும் எனத் தெரிந்தால் போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என கோலாலும்பூர் குற்றப்புலனாய்வுத் துறை (சிஐடி) துணைத் தலைவர் ஏசிபி கைரி அஹ்ராசா கூறினார்.
பேரணி நடப்பதைத் தடுக்க போலீசார் முன்- கைது நடவடிக்கைகளை மேற்கொள்வார்களா என்று செய்தியாளர்கள் வினவியதற்கு கைரி அவ்வாறு கூறினார்.
“அமைதியை நிலைநிறுத்துவதே எங்கள் நடவடிக்கைகளின் நோக்கமாகும். பொது ஒழுங்குக்கு மருட்டல் ஏற்படும் என்று தோன்றினால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்”, என்றாரவர்.
கர்ப்பால் சிங்கின் இறுதி ஊர்வலத்திற்கு போலீசார் போதுமான பாதுகாப்பு தரவில்லை என பினாங்கு முதலமைச்சர் அங்கலாய்த்துக் கொண்டார். ஆனாலும் அவ்வூர்வலத்தில் எவ்வித அசம்பாவிதமும் இடம்பெற்றதில்லை. அதே போன்று மே 1 பேரணிக்கும் போலீசார் வராதிருந்தாலே நல்லது.
பேரணிக்குள் போலீஸ் நுழைந்து குழப்படி செய்யாமல் இருந்தால்,பேரணி அமையாகவே வெற்றிகரமாக நடக்கும்!
மலேசிய மக்கள் அமைதியை நாடுபவர்கள். போலீஸ்காரர்கள் வேண்டுமென்றே, அமைதி மறியலை குலைக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்துனையையும் செய்யாமல் இருந்தால் சரி. மறியல் அமைதியாகவே நிறைவேறும்.
சொல்லிவிட்டிர்கள் அல்லவா! அம்னோவுக்கு அல்வா கிடைத்த மாதிரி! நிச்சயமாக மிரட்டுவார்கள்!
உங்கள் நடவடிக்கையே அமைதிக்கு மிரட்டலாகமல் இருந்தால் சரி . நன்றி வணக்கம்
ரோட் புளோக் போட்டு தடுக்காமல் இருந்தால் கோடி புண்ணியம்.
போலீஸ்காரர்கள் போலீஸ்காரர்களாக இருந்தாலே போதும், பேரணி அமையாக வெற்றிகரமாக நடக்கும். அமைதியை சீர்குலைப்பது பேரணியில் கலந்து கொள்பவர்கள் அல்லவே!!!
பேரணிக்கு குழப்பம் விளைவிப்பதே இந்த போலீஸ் தான்
அண்மைய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பினை போலிஸ் கருத்தில் கொண்டால் நல்லது…..எல்லாம் அமைதியாகவே நடக்கும்….