சிலாங்கூரில் நீர்ப் பங்கீடு தொடர்வதால் வெறுப்பு வளர்ந்துவரும் வேளையில். நீர் நெருக்கடிக்குத் தீர்வுகாணப்படும் என்று மந்திரி புசார் அப்துல் காலிட் ஆறுதல் கூறுகிறார்.
“ஐந்திலிருந்து ஆறு மாதங்கள்வரை நீடிக்கக்கூடிய எதிர்வரும் கோடைக்காலத்தில் தண்ணீர் கிடைப்பதை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கி விட்டோம். எனவே, மக்கள் தொடர்ந்து பொறுமைகாத்து அரசு பிரச்னைக்குத் தீர்வு காணும் என்று நம்ப வேண்டும்”, என்றவர் ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.
குடிநீர் விநியோகம் பற்றிக் குடியிருப்பாளர்களுக்குத் தகவல் தெரிவிக்க வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி இரண்டு நாள்களுக்கு ஒரு தடவை செய்தியாளர் கூட்டம் நடத்தப்படும் என்றும் காலிட் கூறினார்.
பகதன் ஆட்சியில் ஒரு பாரிசன் மந்திரி பெசார் என்பது உறுதியாகிவிட்டது. உடனடியாக மாற்றம் செய்யபடஹ்வுட்டல்,
கெடா மாநிலம் போல அடுத்து செலாங்கூர் மாநிலமுமும் தோல்வி காணும். கெஅடிலன், டிஎபீ , பாஸ் மேலிடம் இதற்க்கு தீர்வுக்கான நாட்கள் குறைந்துகொண்டே வருகிறது.
வானமே இடிந்து விழுவதுபோல் மழை கொட்டுது,அணைக்கட்டு உடைந்து அப்துல் காலிட்டின் வீட்டுக்குள் புகுந்து விடாமல் பார்த்துகொங்கப்பா,திட்டமிட இவரை விட்டால் வேற ஆள் இல்லைங்கோ!
பிரச்னையே நீ தான்ட
பிரச்னைக்கு ஒரு நிரந்திர தீர்வு காணப்பட வேண்டும் என்பது அவர் நோக்கம். தற்காலிக அசௌகரியங்களைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். வேறு வழி இல்லை!