காணாமல்போன எம்எச்370 விமானத்தைத் தேடும்பணி பெர்த்துக்கு வடமேற்கே கிட்டத்தட்ட 1584 கிலோ மீட்டர் தொலைவில் இன்று தொடரும் என ஆஸ்திரேலியாவில் உள்ள கூட்டு ஒருங்கிணைப்பு மையம் (ஜேஏசிசி) அறிவித்துள்ளது. 11 விமானங்களும் 11 கப்பல்களும், 49,567 சதுர கிலோ மீட்டர் கடல்பரப்பில் தேடும் பணியை மேற்கொள்ளும்.
சிறு நீர்மூழ்கிக் கப்பலான புளுஃபின் -21 கடலடியில் தேடுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட பகுதியில் 90 விழுக்காட்டைத் தேடிப்பார்த்து விட்டது. இதுவரை எந்தத் தடயத்தையும் காணவில்லை.
இதனிடையே, நேற்று, ஆஸ்திரேலிய கடலோரம் சில பொருள்கள் ஒதுங்கியதாக அறிவிக்கப்பட்டது மிகுந்த ஆர்வத்தை உண்டுபண்ணியது. ஆனால், அவற்றுக்கும் எம்எச்370-க்கும் தொடர்பில்லை என்பதை ஜேஏசிசி உறுதிப்படுத்தியது.
MH 370 கடலடித் தேடலில் இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லையா ??? அப்படியானால் நமது பிரதமர் கூறியது அவருடைய கற்பனை கதையா ??? அல்லது பொய்யா ???
அட கொய்யாலே !!!!!
நாங்கள் எல்லாம் மறந்து விட்டோம்! நீங்களும் மறந்து விடுங்கள்!
இருக்கும் இடத்தை விட்டு, விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானதங்கமே. ஏதும் அறியேனடி ஞானதங்கமே.
தேனீ அவர்களே, இருக்கும் இடத்தை விட்டு, விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானதங்கமே. ஏதும் அறியேனடி ஞானதங்கமே. நஜிப்புக்கு அறியிமோ ஞான தங்கமே என்றும் சேர்த்துக்கொள்ளுங்கள்….!!!!!
மறைத்து வைத்த பொருளை எப்படி தேடினாலும் கிடைக்காது .என்ன எங்களை எல்லாம் போக்கான சப்புரவர்கள் என்று நினைதிர்கள