ஏற்கனவே இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக ஆறாண்டுகள் சிறையில் இருந்ததாகக் கூறும் அன்வார் இப்ராகிம், இப்போது 2-வது குதப்புணர்ச்சி வழக்கிலும்- இதுவும் தம் அரசியல் எதிரிகளால் ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்குத்தான் என்கிறார்- தாம் சிறைக்கு அனுப்பபடும் சாத்தியம் நிறைய இருப்பதாகக் கூறுகிறார்.
முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிதான் என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, அன்வார் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.
கூட்டரசு நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்யுமானால் அன்வார் மீண்டும் ஐந்தாண்டுச் சிறை செல்ல நேரிடும்.
கூட்டரசு நீதிமன்றத்திலும் தமக்கு நியாயமான விசாரணை கிடைக்கப்போவதில்லை என்று அனைத்துலக தாளிகையான த டிப்ளமேட்-டுக்கு வழங்கிய நேர்காணலில் பிகேஆர் நடப்பில் தலைவரான அன்வார் கூறினார். தம்மை மீண்டும் சிறைக்கு அனுப்புவது என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முடிவுதான் என்றாரவர்.
“விசாரணையை (முறையீட்டு நீதிமன்றத்தில்) எவ்வளவு விரைவாக நடத்தினார்கள். மருத்துவ ஆவணங்களைப் பெறுவதற்கு சில நாள்கள் அவகாசம் அளிப்பதற்குக்கூட மறுத்தார்கள்.
“(முறையீட்டு நீதிமன்ற) தீர்ப்பே குறைபாடுடையது என்பது தெளிவு. ஏனென்றால், திரித்துக்கூறப்பட்ட உண்மைகளை எல்லாம் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. நீதிபதிகள் அவர்களின் அரசியல் எஜமானர்கள் சொல்படி நடப்பது தெளிவாகத் தெரிகிறது.
“எனவே, நியாயம் கிடைக்கும் என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை இல்லை. அது முடிந்த முடிவு”, என்றாரவர்.
ஆழ்ந்த வருத்தங்கள். ஆனால் முயற்சிகளை கை விடாதீர்கள்..
ஆனால் தலைவரே நீங்கள் நம்பும் கடவுள் உங்களுக்கு துணை புரிய வேண்டும்
துணிந்தவனுக்கு தூக்கு மேடையும் துச்சமென நினைப்பான்..! அதுதான் நீதி என்றால் வெட்றியோடு செல்ல தயாராகுங்கள்..?
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. நீதிபதிகளில்லை — இவன்கள் எல்லாம் உண்மையிலேயே திறமை சாலிகளாக இருந்தால் பரவாயில்லை –சுத்த பொருக்கி அரைவேக்காடு காகாதிர் கால கண்டுபிடிப்புகள்.நாம் என்ன சொன்னாலும் ஒன்றும் நடக்காது –என்னுடைய அனுதாபங்கள்.
நாசமா போன அம்னோ அரசாங்கம் ,,,
நாட்டில் கொலை,கொள்ளை,போதைப்பொருள்,கற்பழிப்பு,லஞ்சம்,விவச்சாரம்,போன்ற இன்னும் பலவிதமான கொடூர குற்ற செயல்களில் இடுபடுத்தி வரும் முக்கிய நபர்களிடையே இந்த அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்காமல்,எதிர் கட்சி தலைவர் அன்வாரை மீண்டும் வளைத்து வளைத்து பிடித்து,குற்றம் சாட்டி சிறைவைக்க முயலுவது அரசியல் சதி என்பது,அனைவரும் உணரமுடிகிறது,MH 370 விமானத்துடன் 239 பயணிகளும் காணாமல் போய் இதுவரையிலும் ஒரு ஊசி அளவில் கூட சிறு தடையம் கூட கண்டறிய அறிவில்லாத அம்நோ ஆய்வாளர்கள்,அன்வாரின் குற்றச்செயல் ஆதாரமாக DNA நிபுணர்களின் ஆய்வை ஏற்றுக்கொள்ள முடியுமா?
இதெல்லாம் அரசியலில் சகஜம் அப்பா !
மக்களே பாருங்கள் இந்த பாரிசான் விளையாட்டை.
துணிவே துணை !மக்கள் உங்கள் பக்கம் .மீண்டும் வெற்றி பெறுவீர் கள்
அந்த சை பூல் நாசமா போக
சட்டம் ஒரு இருட்டறை .
நீதித்துறையில் சைபோலின் சூ….க்கு இவ்வளவு மவுசா???? அப்பப்பா சூபெர்லா!!!!!!. இந்த கருமங்களை காணக்கூடாது என்றுதானோ நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டுள்ளதோ???
அடப்பாவிங்களா ..! ஏன் இப்படி மானங்கெட்டு அசிங்கபடுத்தி உங்க இனத்தில் உள்ளவரை இப்படி நடந்துகொள்ளுகீறிகள் .. உங்கள் அசிங்கத்திற்கு ஒரு அளவே இல்லையா ..?
இந்த கருமங்களில் குற்றசாட்டிலிருந்து விட்டு சுத்தமான என்னதிற்கு வந்து திருந்துங்க ..!! நீதிபதிகளே உன் இனத்தை இப்படி அசிங்க படுத்ததான் சட்டம் படித்தீர்களோ ..!!
nila இதில் இன அடிப்படை தேவை இல்லை–நியாயம் ஒன்றே முக்கியம். ஆனால் இந் நாட்டில் நியாயத்தை எதிர்பார்க்கமுடியாது–கூடாது.எந்த இஸ்லாமிய நாட்டில் நியாயம் என்று ஒன்று இருக்கின்றது? ஒருகாலத்தில் இங்கும் சிறிது நீதி-நியாயம் இருந்த்தது –காகாதிர் அதை எல்லாம் நாசமாக்கினான். இன்று இந் நிலை
லாவான் தேதாப் லாவான் .வாழ்க டத்தோ ஸ்ரீ.
…சென்று வா, மகனே/தலைவா சென்று வா, சிறையை வென்று வா, மகனே/தலைவா…… வென்று வா, போன முறை வந்தே பின்னே, சில மாநிலம்…… இம்முறை வந்த பின்னே…… ? எல்லாம் நல்லதற்கே…… தைரியமுடன் சென்று வாரும். எல்லாவற்றையும்..மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கின்றனர்!
எழுதிவைத்த தீர்ப்பை மாற்ற மக்களால் தான் முடியும்,முன்பு டூட்தா நீதிமன்ற தீர்ப்பை மக்கள் மாற்றி சொல்ல வைத்ததுப்போல் !
மனம் வருந்துகிறேன் உங்களுக்கு ஏற்பட்ட நிலைமையை கண்டு
இருட்டில் செல்பவனுக்கு தம்பி ஒபமாவின் வருகை மெழுகு வர்த்தி கிடைத்தது போல் அன்வாரின் நிலை
நாசமா/அழித்து போன அம்னோ அரசாங்கம் ,,