பேரணி பற்றி முன்கூட்டியே தெரிவிக்காததற்காக தண்டிப்பது அரசமைப்புக்கு விரோதமானது

courtமுறையீட்டு   நீதிமன்றம்,  வரலாற்றுச்  சிறப்புமிக்க  ஒரு  தீர்ப்பை  இன்று  வழங்கியது.  பேரணி  நடத்துவது பற்றி  10 நாள்களுக்கு  முன்னதாகவே  தெரியப்படுத்தாத  குடிமக்களைத்  தண்டிக்கும் அமைதிப்  பேரணிச்  சட்டம் (பிஏஏ) பகுதி9 (5),  அரசமைப்புக்கு  விரோதமானது  என  அது  கூறியது.

இத்தீர்ப்பை  வழங்கிய  மூவரடங்கிய  நீதிபதிகள்  குழு,  பிஏஏ-இன்கீழ்  சிலாங்கூர்  சட்டமன்றத்  துணைத்  தலைவர்  நிக்  நஸ்மி  நிக்  அஹ்மட்மீது  சுமத்தப்பட்டிருந்த  குற்றச்சாட்டையும்  தள்ளுபடி  செய்தது.

நீதிபதிகள்  குழுவுக்குத்  தலைமைதாங்கிய  நீதிபதி  முகம்மட்  அரிப்  முகம்மட்  யூசுப்,   அமைதிப்  பேரணியைச்  சட்டவிரோதமானது  என்று  அறிவிக்கும்  அதிகாரத்தை  அச்சட்டம்  அதிகாரிகளுக்கு  அளிக்கவில்லை  என்றார்.