கிளந்தானில் ஹுடுட்டை அமல்படுத்துவதற்கு, பாஸ் நாடாளுமன்றத்தில் தனி உறுப்பினர் சட்டவரைவு ஒன்றைக் கொண்டுவரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள வேளையில் அதைக் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கண்டனத்துக்கு ஆளானார்.
“பிகேஆர் அலோசகரும், நாடாளுமன்றத்தில் எதிரணித் தலைவருமான அன்வார், அவ்விவகாரம் பற்றிப் பேசாதிருப்பது ஏன்?
“எதற்காக அவர் வாயை மூடிக் கொண்டிருக்கிறார்? மலாய் சமூகத்தின் ஆதரவை இழக்க நேரும் என்று அஞ்சுகிறாரா?”, என பிபிபி தகவல் பிரிவுத் தலைவர் ஏ.சந்திரகுமணன் நேற்று ஓர் அறிக்கையில் வினவினார்.
உங்க தலைவர் வாயை திறந்தாரா ?
சரியான பார்வை,கர்பால் திடமாக எதிர்தார் இன்று அதை யார் தொடர்வது.பிரதமர் அவரின் நிலைபாட்டை அறிவித்துவிட்டார்,அடிலான் நிலைபாடு என்ன?,அதன் ஆதரவாலர்கள் மௌனம் எதை குரிக்கிறது.மக்கள் நலனா,அரசியல் ஆதாயமா?வாழ்க நாராயண நாமம்.
இவன் தலைவன் Papua New Guinea இருப்பான். அவனை முதலில் வாயை திறக்க சொல்லுங்கள். அம்னோவிற்கு இன்னும் எத்தனை நாள் இன்னும் கூஜா தூக்க போரிர்.
உமக்கும் உமது கட்சிக்கும் சம்மதமா என்று முதலில் அறிவிக்கவும்.. பிறகு மற்றவர் சூ….. க் கடிப்பதைப்பற்றி முடிவெடுங்கள்…!!!!!!
வாழ்க அன்வார் !!!!.
ஹூடுட் சட்டத்தைப் பற்றி நமக்குள் ஏன் இத்தனை பிணக்கு? இதனை யார் அமலுக்குக் கொண்டு வந்தாலும் நம் நாட்டில் நிலைத்திருக்கப் போவதில்லை. கணித அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்க வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்….. காணாமல் போனது. பப்ஸ் என்ற மதிப்பீட்டுச் சோதனையைக் கொண்டு வந்தார்கள்….. அது செயல்படாமல் போனது. இந்த நாட்டில் யார் புதுமையாக சட்டத்தைக் கொண்டு வந்தாலும் அது குழப்பத்தை விளைவித்து இறுதியில் காணாமல் போவதுதான் வழக்கம். அந்த அடிப்படையில் இந்த ஹூடுட் சட்டமும் நிலைத்திருக்கப் போவதில்லை.
இந்தச் சட்டம் குறித்து அவர்களுக்குள்ளேயே பேதம் இருக்கிறது. என்ன குற்றத்துக்கு என்ன தண்டனை, குற்றம் எப்படி நிரூபிக்கப்பட வேண்டும், எந்த சாட்சி செல்லுபடியாகும் என்று ஏராளமான விஷயங்கள் இன்னும் பொது மக்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்படவில்லை. தேசிய முன்னணி இந்தச் சட்டத்தைக் கொண்ட வந்தால், இஸ்லாமியர் அல்லாதவர் ஆதரவு எதிர் கட்சிக்குச் செல்லும். அப்டியே பாஸ் நிறைவேற்றினாலும் இஸ்லாமியர் அல்லாதவரின் ஆதரவை மக்கள் கூட்டணி இழந்து போகும். இரண்டு கட்சிக்கும் இஸ்லாமியர் அல்லாதவரின் ஆதரவு முக்கியம். இதனை யாரும் இழந்து கொள்ள விரும்ப மாட்டார்கள். எனவே, அவர்கள் வாய்ப் பேச்சு அளவில் மாத்திரமே இச்சட்டத்தை நிறைவேற்ற முடியும்.
சரி, அப்படியிருக்க ஏன் அம்னோவும் பாஸ் கட்சியும் இதனைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றன? இதுதான் அரசியல். அவர்களால் நிறைவேற்ற முடியாது. ஆனால், அவர்கள் தங்கள் மதத்தில் கடப்பாடு கொண்டவர்கள் போல் காட்டிக் கொள்ள வேண்டும். எனவே, அவ்வப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
கர்ப்பால் சிங், தம் சடலத்தைத் தாண்டிய பிறகுதான் ஹூடுட் சட்டத்தை நிறைவேற்ற முடியும் என்று சொன்னதை நாம் மறந்திருக்க முடியாது. கர்ப்பால் சிங் என்ற தனி மனிதன் அல்ல. இந்நாட்டுக் குடிமக்கள் அனைவரும் அத்தகையே நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்.
நான் தயாராக இருக்கிறேன்…. நீங்கள் தயாரா?
ஆமாம்! நீங்கள் வாயைத் திறந்து விட்டீர்கள். ஆமாவா? இல்லையா: உங்கள் நிலை என்ன?
நான் எப்போதே தயாராகிவிட்டேன். என்று இந்நாட்டில் இனக்கலவரம் மூண்டதோ அன்றே இந்நாட்டுக்கு ஏழரை பித்துவிட்டது.அத்துடன் காகாதிரும் ஜால்ராக்கள் சாமியும் MCA தலைகளும் பதவிக்கு வந்ததும் அது நிச்சயமாகிவிட்டது — எல்லாம் இவன்களின் வங்கி கணக்குகள் இமயத்தையும் தாண்டி எங்கோ போய் விட்டது. இன பாகு பாட்டை நிலைநிறுத்திய கேடு கேட்ட ஜென்மங்கள்.
இன்று நாம் ஹுடுட் சட்டத்தை அனுமதிதால் , நம் நாட்டு அரசியல் அமைப்பு சட்டத்தில் ,பல்லின மக்கள் வாழும் நாடாக இருந்த மலேசியா (வெள்ளையர்களால் ………) ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு சொந்தமான நாடாக மாறுவதற்கு நாமே நம் தலையில் மண்ணை போட்டு கொண்ட மாதரி ஆகிவிடும் . அதன் பிறகு என்ன நடக்கும் என்பது சொல்லி தெரிய வேண்டியது ஒன்றும் இல்லை .இப்பொழுதே நம் உரிமையை கொடுக்க மறுக்கும் umno ,அதன் பிறகு ???????????????
எல்லாமே எதிகட்சிகாரனையோ அன்வாரையோ கேட்டுக்கிட்டு தான் மத்திய அரசு செயல் படுகிறதா..? எல்லா முடிவுகளும் அவர்களே எடுத்துகிட்டு இதுல பெர்கசா காரன் சொல்லுறதையும் கேட்டுக்கிட்டு
அப்புறம் என்னய்யா அன்வாரு வாயை தொரக்கில என கூப்பாடு போடுறீங்க..? மத்திய அரசு எல்லா சக்தியும் வச்சி இருக்கு என்ன செயுனுமோ செய்ய வேடியதுதானே..?
பாஸ் கட்சி மடச் சாம்பிராணிகளுக்கு அரசியல் நடத்தத் தெரியாமல் அம்னோ விரித்த வலையில் வீழ்ந்து அடுத்த தேர்தலில் மண்ணைக் கவ்வுவது நிச்சயம்.
அப்பழுது அன்வார் சாப்பிட்டு கொண்டு இருந்திருப்பார் ,அதான் வாயை திறக்கவில்லை ,,போங்கடா
அவரு வாய திறகிராறு இல்லை உமக்கேன் இந்த கேள்வி ,நீ வாய முதலில் திற அப்புறம் அந்த கேள்வியை கேள் புரிகிறதா.நாடு என்ன செய்தது நமக்கு ,நீ என்ன செய்தாய் நாடிற்கு தமிழ் மக்களுக்கு.
தேனீ அவர்களே ! பாஸ் கட்சியில் உள்ள சிறு பிரிவு செய்யும் கோளாறுதான் இது ! பாஸ் கட்சியில் உள்ளவர்கள் சிலர் அம்னோவிடம் சேர விரும்புகின்றனர் இவர்கள் முன்னாள் அம்னோ கட்சிக்காரர்கள் , உலாமாக்கள் குடைச்சல் கொடுப்பதும் உண்மையே !
வந்துடனைய அன்வார் ….து நோண்ட ? இவன் கட்சி அம்னோ கரன்
வேண்டாம் என ஒரு காலத்தில் சொன்ஹன் .இவன் தமிழ் சமுதயம்
என்ன செய்தான் ??
தமிழர் நந்தா, இது ஜ.செ.க. -க்கு மக்கள் கூட்டணியில் இருக்கும் செல்வாக்கை “செக் மேட்” செய்ய ஒரு தந்திரமே. பாஸ் கட்சியில் இருக்கும் மத அறிவாளிகளுக்கு இந்த பிரேணனை நாடாளுமன்றத்தில் அம்பலம் ஏறாது என்று தெரிந்தும் அதனை முன் வைப்பதற்கு 2 காரணங்கள் உண்டு. (1) ஜ.செ.க. -க்கு, பாஸ் கட்சி கட்டுப்பட்டு இருக்கவில்லை என்று மலாய்க்காரர்களுக்கு படம் காட்டி அதன் வழி அரசியல் இலாபம் தேடுவது (2) நாங்கள் ஹுடுத் சட்டத்தை அமுலாக்க முயற்சி செய்தோம் ஆனால் எங்களுக்கு போதுமான அரசியல் ஆதரவு கிடைக்கவில்லை ஆதாலால் கை விட்டோம் என்று இவர்கள் அடுத்த தேர்தலில் மலாய்க்காரர்களிடம் சொல்லிக் கொள்ளலாம். ஆக, இவர்கள் அடுத்து வரும் தேர்தலில் சிலாங்கூரைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் மலாய்க்காரர்களின் ஒட்டு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆனால், இந்த அறிவிலித்தனமான செய்கையால் பாஸ் கட்சி அடுத்த தேர்தலில் சீனர்களின் செல்வாக்கை சிலாங்கூரில் இழக்க நேரிட்டு அதனால் நேரடி இலாபம் பெறப் போவது இவர்களைத் தேர்தலில் எதிர்த்து போரிடும் அம்னோ கட்சியே. கணிசமான சீனர்களின் ஒட்டு மீண்டும் ம.சீ.ச. கட்சிக்கு செல்லும் வேளையில், ஒரு சில சொற்ப இடங்களை ம.சீ.ச. கைபற்ற அவர்களுடைய உதவியுடன் சிலாங்கூரைக் அம்னோ கை பற்ற முடியும். அதனாலையே, அம்னோ இவ்விடையத்தில் நிபந்தனையுடன் பாஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்று பசப்பல் வார்த்தையை முன் வைத்துள்ளது. இதனையே இன்னும் 2 ஆண்டுகளுக்கு ஒட்டிக் கொண்டிருந்தால் 4 -வது ஆண்டில் திடீர் தேர்தல் வைத்தால் மக்கள் கூட்டணி சிலாங்கூரில் மண்ணைக் கவ்வும். பாஸ் கட்சியில் இருக்கும் உலாமா கோஷ்தியினருக்கு இதனால் நட்டமில்லை காரணம் அவர்களின் ஆள்காட்டி விரலின்படி அங்கு ஆட்சி நடக்கவில்லை. .நட்டம் அடையப் போவது மக்கள் நீதிக் கட்சியும், பாஸ் கட்சியில் இருக்கும் ‘Golongan Erdogan” மட்டும்மே. இதன் முன்னோட்டமே டைமின் உதவியுடன் கலிட்டுக்கு வலை விரித்து சிக்கவைத்தது. இதனை தடுக்க முயன்ற அன்வாருக்கு நீதிமன்ற தண்டனையுடன் ‘செக் மேட்’ செய்தது. கூடிய விரைவில் சிலாங்கூர் முதல் அமைச்சரை மாற்றாவிட்டால் கெடாவில் ஏற்பட்ட கதியே மக்கள் கூட்டணிக்கு சிலாங்கூரிலும் நடக்கும் என்பது நிதர்சன உண்மை.