மலேசிய வருகையின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பெர்சே, இஸ்லாமிய மறுமலர்ச்சி முன்னணி முதலிய சமூக அமைப்புகளையும் மலேசிய வழக்குரைஞர் சங்கத்தையும் சந்திப்பார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அச்சந்திப்புக்கு, அமெரிக்கத் தூதரகம் சுமார் 10 பேரை அழைத்திருப்பதாக ஒரு என்ஜிஓ பிரதிநிதி கூறினார். சந்திப்பு நடைபெறும் இடம், நேரம் ஆகியவற்றை அவர் தெரிவிக்கவில்லை.
மலேசியாகினிக்குத் தகவல் தெரிவித்த அவரும் தம் பெயர் குறிப்பிடப்படுவதை விரும்பவில்லை.
ஒபாமாவுடனான அச்சந்திப்புக்கு எம்பவர், இஸ்லாத்தில் சகோதரிகள், மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்), தெனாகானிதா ஆகிய அமைப்புகளும் அழைக்கப்பட்டுள்ளன.
மஇக தலைவர் ஊமைத்துரையை இந்தியர்களின் சார்பில் அழைக்காதது வருத்தமே,
அமெரிக்கா நாட்டின் அதிபர் இது தான் முதல் வருகை நம் மலேசிய நாடிற்கு நாம் அனைவரும் அவரை வரவேற்போம்,அவர் ஆளும் கட்சி ,எதிர் கட்சி தலைவர்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
ஒரு வேலை சுங்கை புலோ சிறையில் அன்வார் இருந்தால் , ஒபாமா ஜெயிலில் சந்திப்பு நடத்துவாரோ ?
மேற்குறிப்பிட்ட அமைப்புக்களோடு மற்ற இந்து, கிறிஸ்துவ, சீக்கிய, பௌத்த அமைப்புக்களையும் சந்திக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மலேசியா பல சமயங்கள் சார்ந்த நாடு என்பது ஒபாமாவுக்கும் புரிய வேண்டும்.
……………….எனக்கு இப்பாத்தான் தெரிந்தது