மருந்துகள் கட்டுப்படியாகும் விலையில் கிடைக்க வேண்டும்: ஒபாமாவுக்கு என்ஜிஓ-கள் கோரிக்கை

tppaவணிக  ஒப்பந்தங்களில்  மருந்துகளின்  விலைகள்  நோயாளிகளும்  எழைகளும்  வாங்க  முடியாத  அளவுக்கு  உயர  இடமளிக்கக்  கூடாது  என  மலேசிய  மருத்துவ  அமைப்புகளும்  என்ஜிஓ-களும்   சேர்ந்து  அமெரிக்க அதிபர் பராக்  ஒபாமாவுக்குக்  கோரிக்கை  விடுத்துள்ளன.

அமெரிக்க  முயற்சியில்  உருவாகியுள்ள  பசிபிக்  வட்டார  பங்காளித்துவ  ஒப்பந்தம் (டிபிபிஏ), மருந்து  தயாரிப்பு  நிறுவனங்கள்  அவற்றின்  காப்புரிமைப்  பட்டயங்களைத்  திரும்பத்  திரும்பப்  புதுப்பிக்க  இடமளிப்பதாக  அந்த  21  அமைப்புகளும்  கூறியுள்ளன.

மலேசியாவில்  ஏய்ட்ஸ்  நோயாளிகளுக்கு generic அல்லது  விலைகுறைந்த  எச்ஐவி  மருந்துகள்தாம்  கட்டுப்படியாக  உள்ளன.  ஆனால், டிபிபிஏ-இன்கீழ்  அவற்றை வாங்குவதுகூட  முடியாத  செயலாகி  விடும்.

“பெரிய  அண்ணன்  என்ற  முறையில்  அவர்கள்  எடுப்பதைவிட  கொடுப்பது  அதிகமாக  இருக்க  வேண்டும்”,  என  மலேசிய  மருத்துவச்  சங்கத்  தலைவர்  டாக்டர்  என்.கே.எஸ். தர்மசீலன்  செய்தியாளர்களிடம்  கூறினார்.