ஜிஎஸ்டி எதிர்ப்பில் ஈடுபட்ட மூன்று மாணவர்கள் கைது

antiசாபாவில்,  ஜிஎஸ்டி-எதிர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக  மூன்று  சமூக  ஆர்வலர்கள்  அரசமைப்புக்குவிரோதமான  ஒரு  சட்டத்தின்கீழ்  கைது  செய்யப்பட்டிருப்பதாகக்  கூறப்படுகிறது.

போலீசார்  அமைதிப்பேரணிச்  சட்டம்  2012, பகுதி  9(5)இன் கீழ்  அவர்களைக்  கைது  செய்திருக்கிறார்கள்  என்றும்  அச்சட்டம்  அரசமைப்புக்கு  விரோதமானது  என  முறையீட்டு நீதிமன்றத்தால்  கடந்த  வெள்ளிக்கிழமை  அறிவிக்கப்பட்டது  என்றும்    மலேசிய  மனித  உரிமைக் கழகமான  சுவாராம்  மலேசியாகினியிடம்  தெரிவித்தது.

பொருள்,  சேவை  வரிக்கு  எதிராக, கோத்தா  கினாபாலுவில்,  சுமார்  30 பேர்  ஆர்ப்பாட்டம்  செய்தபோது  அவர்களில்     காபோங்கான்  மஹாசிஸ்வா இஸ்லாம்  ச-மலேசியா (சாபா),  தலைவர்  முகமட்  பாத்திஹி டைமான், காபோங்கான்  அனாக்  மூடா  மெனுந்துட்  ஹாக்  ரக்யாட்  சாபா(கெகார்)  பேச்சாளர்  கைருடின் டாவுட்,  கெகார்  சமூக  ஆர்வலர்  பிர்மான்  பிர்டுஸ்  ஆகிய  மூவரும்  கைது  செய்யப்பட்டனர்.