‘நாங்கள்தான் ஆள வேண்டும்’: அமெரிக்காவிடம் கூறினர் பக்காத்தான் தலைவர்கள்

pakatanகடந்த  மே மாதப்  பொதுத்  தேர்தலில்  கூடுதல்  வாக்குகள்  பெற்றபோதிலும்  எதிரணியினரால்  ஆட்சிக்கு  வரமுடியாமல்  போயிற்று  என்று  பக்காத்தான்  தலைவர்கள்  அமெரிக்காவின்  தேசிய  பாதுகாப்பு  ஆலோசகர்  சூசன்  ரைஸிடம்  தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க- பக்காத்தான்  தலைவர்களுக்கிடையில் இன்று  கோலாலும்பூரில்  45-நிமிட  சந்திப்பு  ஒன்று  நடந்தது.

அது பற்றி  செய்தியாளர்களிடம் விவரித்த டிஏபி தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்,   நாட்டில்  மனித  உரிமை,  ஜனநாயகம், சுதந்திரம்  ஆகியவை  குறித்து  அறிக்கை  விடுத்துள்ள  அமெரிக்கா  உண்மையிலேயே  அவற்றில்  அக்கறை  கொண்டிருந்தால்  மலேசியாவில்  தேர்தல்  சீரமைப்பு  நடப்பது  அவசியம்  என்பதை பிகேஆரின்  அன்வார்  இப்ராகிம்,  பாஸ் தலைமைச் செயலாளர்  முஸ்தபா  அலி,    ஆகியோருடன்  தாமும்   வலியுறுத்தியதாகக்  கூறினார். .

“எங்கள்  கட்சிக்குத்தான்  அதிகமான  வாக்குகள்  கிடைத்தன. நாங்கள்தான்  ஆளும் கட்சியாக  இருக்க  வேண்டும்”, என்றாரவர்.

தாங்கள்  கூறியதை  ரைஸ்  கவனத்தில்  கொண்டார்  என்று  கூறிய  லிம்,  பதிலுக்கு  அவர்  மலேசியா  எல்லாரையும்  அரவணைத்துச்  செல்ல  வேண்டும்  என்றும்  சிறுபான்மையினர்  உரிமைகளைக்  காலில்போட்டு  மிதிக்கக்கூடாது  என்றும்  அமெரிக்க  அதிபர்  பராக்  ஒபாமா  குறிப்பிட்டதை  வலியுறுத்தினார்  என்றார். .