மகாதிர்: தெரு ஆர்ப்பாட்டங்களால் தீமையே

protestதெரு  ஆர்ப்பாட்டங்கள்  தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசாங்கங்களைக்  கவிழ்க்கும்  நோக்கம்  கொண்டவை  என்கிறார்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்.

“இதுவரை  மலேசியாவை  நிலைகுலைய  வைக்கும்  அளவுக்குப்  பெரிய  ஆர்ப்பாட்டங்கள்  தொடர்ச்சியாக  நடத்தப்பட்டதில்லை. ஆனால், நடக்கும்  என்பதற்கான  அறிகுறிகள்  தெரிகின்றன.

“தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசாங்கத்தை  ஆர்ப்பாட்டங்கள்வழி கவிழ்க்க  விரும்பும்  மலேசியர்களும் இருக்கிறார்கள்  என்பது  தெரிந்த  விசயம்தான்”,  என்று  மகாதிர்  குறிப்பிட்டார்.

பெர்சே  ஏற்பாடு  செய்த  ஆர்ப்பாட்டங்களின்  நோக்கமே  மக்களுக்கு  உசுப்பேற்றி முடிவில்  அரசாங்கத்தைக் கவிழ்ப்பதுதான்.

“ஜனநாயகம்  பிழைத்து  அது எந்த  நோக்கத்துக்காக  உருவாக்கப்பட்டதோ  அந்த  நோக்கம்  நிறைவேற  வேண்டுமானால்,  நாம்  ஜனநாயகம்  என்று  கருதும்  உரிமைகள்  கட்டுப்படுத்தப்படுவதையும்  ஏற்கத்தான்  வேண்டும்.
“பேச்சுச்  சுதந்திரம்,  பத்திரிகைச்  சுதந்திரம்,  ஆர்ப்பாட்டங்கள்,  வேலை  நிறுத்தங்கள்  போன்றவை  ஒரளவுக்குக்  கட்டுப்படுத்தப்பட  வேண்டும். இல்லையேல்  ஜனநாயகம்  என்ற  பெயரில்  ஜனநாயகம்  அழிந்து  போகும்”.

தமது  அண்மைய  வலைப்பதிவில்  டாக்டர்  மகாதிர்  இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.