நாட்டின் உண்மையான எதிரிகள்: மகாதிருக்குப் பாடம் நடத்துகிறார் அம்பிகா

ambika“ஊழல், அதிகார  அத்துமீறல்,  அடிப்படை  நிறுவனங்களின்  அழிவு,  மனித  உரிமைகள் பறிக்கப்பட்டது, இனவாதம்,  தீவிரவாதம்…….போதுமா  இன்னும்  சொல்லட்டுமா?”, என்று  வினவினார்  எஸ்.அம்பிகா.

நாடு  நிலைகுலைந்து  போவதற்கு  இவைதாம்  காரணமே  தவிர  தெரு  ஆர்ப்பாட்டங்கள்  அல்ல  என்றாரவர்.

“மலேசியாவைப்  பொருத்தவரை  இவைதாம்  நாட்டை  நிலைகுலைய  வைத்தன,  வைத்துக்  கொண்டிருக்கின்றன”.

டாக்டர்  மகாதிர்  தெரு  ஆர்ப்பாட்டங்களால்  நாடு  நிலைகுலைந்து  போகும்  என்று   கூறி  இருப்பதற்கு  எதிர்வினையாக  முன்னாள்  பெர்சே  தலைவரான  அம்பிகா  இவ்வாறு  கூறினார்.