காணாமல்போன மலேசிய விமானத்தைத் தேடும்பணி ஒரு புதிய கட்டத்தை அடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலடியில் தேடும்பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறிய ஆஸ்திரேலியாவில் உள்ள ஒருங்கிணைப்பு மையம் (ஜேஏசிசி), மற்றவகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்வரை, சிறுரக நீர்மூழ்கிக் கலமான புளுபின் 21 கடலடித் தேடலைத் தொடரும் என்று குறிப்பிட்டது.
“பிங்கர் ஒலிகள் வருவதாக அடையாளம் காணப்பட்ட இடத்தைச் சுற்றி 314 கிலோமீட்டர் சதுரப் பகுதியைத் தேடிப்பார்த்து விட்ட புளுபின் 21, இனி, பக்கத்துப் பகுதிகளில் தேடலைத் தொடரும்”, என ஜேஏசிசி ஓர் அறிக்கையில் கூறியது.
ஆகாயத்திலிருந்து தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது.
ஒபாமா வந்து போய் விட்டரல்லவா ….அதனால் இனி தேடும் விதமே வேறு பட்டிருக்கும். உலகிலேயே அதி நவீன கண் கட்டி வித்தை நடத்தி கொண்டிருகிறது மலேசியா. ஆமாம் 4 டன் மங்குஸ்தீன் என்னவாயிருக்கும் …..
அடுத்த கட்ட தேடும்பணிக்கு எங்க நாட்டின் விலையுயர்ந்த மீன்பிடி நீர்மூழ்கி கப்பலான ” SCORPION ” -னையும் சேர்த்து கொள்ளுங்கள்.
அடுத்த கட்ட தேடும்பணிக்கு எங்க நாட்டின் விலையுயர்ந்த மீன்பிடி நீர்மூழ்கி கப்பலான ” SCORPION ” -னையும் சேர்த்து கொள்ளுங்கள்.சாரி! தங்கள் கூரிய நீர்முழ்கி கப்பல் மலக்க நீரினைல் மட்டும் செல்ல முடியும் என்பதை மறந்து விட்டீர்களே ! அன்பரே !
இப்படி எத்தனை கட்டத்தை தாண்டி இப்ப நீங்க எந்த கண்டத்தில் இருகின்றீர்கள் என்பதே மறந்துப் போச்சு!.
நான் குறிப்பிட்டது “விலையுயர்ந்த மீன்பிடி நீர்மூழ்கி கப்பல்”, அதாவது
மீன் பிடிக்க பயன்படுத்தபடும் நீர்மூழ்கி கப்பல். நீங்கள் சொல்வதை பார்த்தால், பிரதமர் தன்னுடைய குல தொழிலுக்கு (மீன்பிடி) கூட பாவிக்க முடியாததுபோல் தெரிகிறது.