பாஸ், கிளந்தானில் ஹுடுட் சட்டத்தைச் செயல்படுத்த வகைசெய்யும் சட்டவரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் முயற்சியைத் தொடருமானால், பக்காத்தான் ரக்யாட் வருங்காலத்தில் வாக்குகளை இழக்க நேரும் என எட்டு பெளத்த சங்கங்களின் கூட்டணி எச்சரித்துள்ளது.
அக்கூட்டணி, மலேசிய கிறிஸ்துவ இளைஞர் சங்கத்துடனும் சமயச் சார்பற்ற இதர ஆறு இளைஞர் அமைப்புகளுடனும் கூட்டாக வெளியிட்டிருக்கும் ஓர் அறிக்கையில், மலேசியா, பல இனங்களைக் கொண்ட நாடு என்பதால் இதற்கு ஹுடுட் ஒத்துவராது என்பதை பாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியது.
அந்தச் சட்டவரைவைக் கைவிடுமாறு பக்காத்தான் பங்காளிக் கட்சிகளான பிகேஆரும் டிஏபியும் பாஸுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அது கேட்டுக்கொண்டது.
இந்து சங்கம், சைவ சமய பேரவை, இந்து தர்ம மாமன்றம் கிறிஸ்துவ அமைப்புகள் நீங்களெல்லாம் எப்பொழுது அறிக்கை விடப் போகின்றீர்கள்?. புத்த மதத்தினர் உங்களை எல்லாம் முந்திக் கொண்டனரே. இவ்வியக்கங்கள் கொடுக்கும் நெருக்குதலில் அரசாங்கம் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு எதிர்வரும் பிரச்சனைக்கு அம்னோ கொடுத்த ஆதரவை மீட்டுக் கொள்ள வேண்டும். இல்லையேல் இந்த நாட்டின் எதிர்கால தலை எழுத்து அதோகதிதான். மக்கள் கூட்டணியும் அடுத்த தேர்தலில் மண்ணைக் கவ்வ வேண்டி இருக்கும். இன்னும் வரவிருக்கும் இடைத் தேர்தல்களை மறந்து விடாதீர்கள். சீனர்கள் எதையும் வெளியே சொல்லி விட்டு செய்வதில்லை. வாயை மூடிக் கொண்டு ஓட்டுப் போடும் பொழுது தங்கள் திறனை காண்பிப்பதில் அவர்கள் பலே கில்லாடிகள்.
அம்னோவின் உள்நோக்கத்தினை அறிந்து செயல்படுவது பிற இனத்தவருக்கு நல்லது. அம்னோ பேரவையின் போது மலாய்க்காரர்கள் ஒன்றிணைந்தால் பிற இனத்தவரின் ஆதரவு தேவையில்லை என்று உரைத்ததை மறக்கவேண்டாம் அன்பரே!!!!! ஹூடுட் அம்னோவுக்கு முக்கியமல்ல, சர்வாதிகாரமே குறிக்கோள்…..!!!!!!
டதொக் ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கவனத்திற்கு அபாயம் வந்து விட்டது கவனம் இல்லையே அடுத்த தேர்தல்,இடைதேர்தல் பகாதான் ராக்யாட் அபாயம்.
HDUD ,நன் தமிழன் ,இதற்க்கு முழு ஆதரவு ,,HUDUD சட்டம் நாடு முழுவதும் அமலாக்க வேண்டும்