மே தினம்: ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணி நடத்த நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி

 

May Day - GST1அதிகாரத்தினருடன் நடத்தப்பட்ட ஏகப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பொருள்கள் மற்றும் சேவை வரிகளுக்கு (ஜிஎஸ்டி) எதிரான பேரணி ஒன்றை நாளை நடத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் கூறிகொள்கின்றனர்.

அப்பேரணியில் பங்கேற்பவர்கள் நாளை டாத்தாரான் மெர்தேக்காவின் எதிர்புறத்திலுள்ள ஜாலான் ராஜாவில் கூடுவதற்கு அனுமதிக்கப்படுவர்.

ஏற்பாட்டுக்குழுவின் உறுப்பினரான பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு இப்பேரணியில் பங்கேற்பவர்கள் தொழிலாளர் இனப் போராட்டத்தின் சின்னமான சிவப்பு உடையை அணிந்திருப்பவர் என்று கூறினார். பிற்பகல் மணி 2.00 தொடங்க திட்டமிடப்பட்டிருக்கும் இப்பேரணிக்காக ஜாலான் ராஜா போக்குவரத்துக்கு மூடப்படும். இதற்கு டாங் வாங்கி போலீஸ்May Day - GST2 நிலையத்தின் தலைவர் ஸைனுடின் அஹமட் ஒப்புக் கொண்டுள்ளதாக சாபு கூறினார்.

பேரணியில் பங்கேற்பவர்கள் டாத்தாரான் மெர்தேக்காவுக்குள் நுழையக்கூடாது என்ற போலீசாரின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

ஆனால், பங்கேற்பாளர்கள் அணிவகுத்துச் செல்வதை போலீசார் அனுமதிக்க மாட்டார்கள். பங்கேற்பாளர்கள் திரள்வதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நான்கு – மஸ்ஜிட் நெகாரா, சோகோ, டத்தாரான் மே பேங்க் மற்றும் கேஎல்சிசி – இடங்களிலிருந்து அவர்கள் ஜாலான் ராஜாவை நோக்கி “நடந்து” செல்ல வேண்டும் என்று மாட் சாபு தெரிவித்தார்.

 

 

May Day - GST3