இஸ்லாமியச் சட்டத்தைக் கொண்டு வருவதில் பாஸ் பிடிவாதமாக இருந்தால், பின்னர் எதிரணியில் அதற்கு இடமில்லை என்று கடுமையாக எச்சரித்துள்ளார் டிஏபி இடைக்கால தலைவர் டான் கொக் வாய்.
இஸ்லாமிய அரசை அமைப்பது பற்றி பாஸ் வேண்டுமானால் தொடர்ந்து “கனவு காணலாம்” ஆனால், டிஏபி அதற்கு உடன்படாது என்று கட்சித் டிஏபி தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் டான் கூறினார்.
பின்னர் மலேசியாகினி அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது, “பக்காத்தானை உருவாக்கியபோது இஸ்லாமிய அரசை அமைக்கவோ ஹுடுட்டைச் செயல்படுத்தவோ ஒப்புக்கொள்ளப்படவில்லை”, என்றாரவர்.
டி ஏ பி தனது நிலைப்பாட்டினை அறிவிப்பது தவறல்ல. செய்யும் அறிவிப்பு பிற பங்காளிக்கட்சியினரின் மனதினை புண்படுத்தாவண்ணம் இருக்க வேண்டும். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்…!!!!!
புத்ராஜயாவை கைப்பற்றுவதையே குறிக்கோளாய் கொள்ளவும்….அதுவே பக்காத்தானின் தாரகை மந்திரமாக ஒலிக்க வேண்டும்….!!!!!!
ம இ க என்ன பண்றான்?
சிவாஜி அவர்களே, செத்த பாம்பை அடிக்கச் சென்றுவிட்டார்கள் நீங்கள் குறிப்பிட்டோர் !!!!!! அதாவது உறுப்பிடியாக செய்யட்டும்!!!!