முஸ்லிம்-அல்லாத மாணவர்கள் இஸ்லாமிய விவகாரம் குறித்து குடையப்பட்டனர்

 

mara - non muslim students1மஜ்லிஸ் அமனா ராக்யாட் (மாரா) உபகாரச் சம்பளத்திற்கு மனு செய்திருந்த முஸ்லிம்-அல்லாத மாணவர்கள் இஸ்லாமிய விவகாரங்கள் குறித்து குடையப்பட்டனர். இந்த விவகாரம் சரவாக் அரசியல்வாதிகளின் சினத்தை தூண்டியுள்ளது.

நேர்காணலின் போது, ஹூடுட் சட்டம் பற்றியும் முஸ்லிம் தொழுகை குறித்த அவர்களின் அறிவு குறித்தும் அவர்களிடம் கேட்கப்பட்டதாக மாணவர்கள் முறையிட்டனர்.

எஸ்பிஎம் தேர்தலில் Aக்கள் பெற்றிருந்த இபான் மாணவர் நைஜல் அன்சாட்ஜெரிமியா இந்த விவகாரத்தை பிகேஆர் சரவாக் தலைவர் மற்றும் மாநில அமைச்சர் ஜேம்ஸ் மாசிங்கிடம் எழுப்பியிருக்கிறார்.

திறந்த கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது, இஸ்லாமிய விவகாரங்கள் குறித்தும் முஸ்லிம் போதகர்கள் பற்றியும் தம்மிடம் கேட்கப்பட்டதாக நைஜல் கூறினார்.

நெகிரி செம்பிலான், மாரா கல்லூரி சிறம்பானில் மெக்கானிக்கல் என்ஜியரின் படிப்பு மேற்கொள்வதற்கான மாரா உபகாரச் சம்பளத்திற்கு மனு செய்ய அவர் விரும்பினார்.

இதே போன்ற கேள்விகள் தம்மிடமும் கேட்கப்பட்டதாக இன்னொரு மாணவரும் கூறினார்.

இது குறித்து மாரா அதிகாரிகளை குறைகூறிய மாசிங், “அவர்கள் கேள்விகள் தயாரிப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதோடு அனாவசியமான பிரச்சனைகளையும் கேள்விகளையும் எழுப்பக்கூடாது”, என்றாரவர்.

mara - non muslim students2இவ்வாறான கேள்விகளைக் கேட்பதின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பிய அந்த மூத்த அமைச்சர் முஸ்லிம்-அல்லாத மாணவர்களை நிராகரிப்பது அதன் நோக்கமாக இருக்கலாம் என்று தாம் நம்புவதாக கூறினார்.

“அந்த அதிகாரிகள் ஏதோ மத வெறியர்களைப் போல் நடந்து கொண்டுள்ளனர். இக்கேள்விகள் சம்பந்தமில்லாதவை. மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு என்பதால், இந்த நாடே இஸ்லாமிய போதனைகளை தெரிந்திருக்க வேண்டும் என்று அர்த்தமாகாது.

“அவர்கள் இஸ்லாமிய அடிப்படையிலான கேள்விகளைக் கேட்டிருக்கக் கூடாது. இது முற்றிலும் தவறு. உயர்கல்வி பெறுவதற்காக உபகாரச் சம்பளத்திற்கு செய்யப்படும் மனுவுக்கும் இக்கேள்விகளுக்கும் என்ன சம்பந்தம்?

“நான் இது போன்ற சம்பவம் மீண்டும் ஏற்படுவதை விரும்பவில்லை, குறிப்பாக சரவாக்கில். இங்கு அதிகமான பூர்வீக குடிமக்கள் இருக்கின்றனர் என்பதோடு முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கின்றனர்”, என்று அவர் மேலும் கூறினார்.

இது எவ்வளவு காலமாக நடந்துகொண்டிருக்கிறது?

இச்சம்பவம் குறித்து கடும் சினமடைந்தவர் சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியன் ஆவார். இக்குற்றச்சாட்டுகள்mara - non muslim students3 உண்மை என்றால், இது அப்பட்டமான வேறுபாடாகும்.

“முஸ்லிம்-அல்லாத மாணவர்களை சாதுர்யமாக இஸ்லாமியர்களாக்குவது மற்றும் சிறுபான்மையிரை அடக்கி ஆட்கொள்வதற்கு அதிகாரத்திலுள்ளவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இது இன்னொரு சான்றாகும்”, என்று அவர் மேலும் கூறினார்.

இது குறித்த விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்திய பா’கெலாலான் சட்டமன்ற உறுப்பினரான அவர், ” இது ஒரு பொது நிதியாகும். இது அதிகாரிகளின் தெளிவான அதிகார அத்துமீறலாகும். இது எவ்வளவு நாளாக நடந்துகொண்டிருக்கிறது என்று வியக்கிறேன்”, என்றாரவர்.

வேண்டுமென்றே செய்கின்றனர்!

இதனிடையே, டிஎபி செரியான் கிளைத் தலைவர் எட்வர்ட் லுவாக் முஸ்லிம்-அல்லாத பூர்வீக மாணவர்கள் உபகாரச் சம்பளம் பெறுவதை வேண்டுமென்றே தடுக்க மாரா அதிகாரிகள் முயற்சிக்கின்றனர் என்றார்.

“கிறிஸ்துவ மாணவர்களிடம் இஸ்லாமிய விவகாரம் சம்பந்தப்பட்ட கேள்விகளை அவர்கள் கேட்கக்கூடாது.

“நிச்சயமாக அவர்கள் இக்கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. இது பெரும் அநியாயமாகும்”, என்று அவர் கூறினார்.