அன்வார்: ஹுடுட் சர்ச்சையால் பக்காத்தானுக்கு எதுவும் ஆகிவிடாது

anஹுடுட்  விவகாரம்  தொடர்பில்  பாஸ், டிஏபி  கட்சிகள்  சர்ச்சையிட்டுக்  கொண்டாலும்  அதனால்  பக்காதான்  ரக்யாட்டுக்கு  ஆபத்தில்லை  என  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  கூறுகிறார்.

“அவர்கள்  தொடர்ந்து விவாதிக்க  விட்டுவிடுவது  நல்லது. நேற்றுகூட (செவ்வாய்க்கிழமை) அவ்விவகாரம்  பற்றி  நீண்ட  நேரம்  விவாதித்தோம்”,  என்றவர்  சொன்னார்.

கருத்துவேறுபாடுகள்  நிலவினாலும்  மூன்று  கட்சிகளுக்கிடையிலும்  உறவுகள்  சுமூகமாக  உள்ளன  என்றாரவர்.

ஹுடுட்  விவகாரத்தால்  பக்காத்தான்  உடைந்து  போகுமா  என்று  கேட்கப்பட்டதற்கு  அன்வார்  இவ்வாறு  பதிலளித்தார்.