ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணிக்கு மக்கள் திரள்கின்றனர்

gstபொருள்,  சேவை  வரி(ஜிஎஸ்டி)க்கு  எதிர்ப்புத்  தெரிவிக்க  89  என்ஜிஓ-கள்  ஏற்பாடு  செய்துள்ள  மே  தினப்  பேரணியில்  10,000-க்கும்  அதிகமானோர்  கலந்துகொள்வார்கள்  என  எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலாளர்  தினத்தில்  நடைபெறும்  இப்பேரணியில் எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  கலந்து  கொள்வார்  எனத்  தெரிகிறது.

டாட்டாரான்  மெர்டேகாவை  ஒட்டியுள்ள  ஜாலான்  ராஜாவில் பிற்பகல்  மணி  2  தொடங்கி  மாலை  5வரை  பேரணி  நடைபெறும். பேரணியில்  கலந்துகொள்பவர்கள்  முன்னதாக  கேஎல்சிசி,  சோகோ,  டாட்டாரான்  மே  பேங்க்,  ஜாலான்  ராஜா  லாவுட்  ஆகிய  இடங்களில்  ஒன்றுதிரண்டு  அங்கிருந்து  ஜாலான்  ராஜாவுக்கு  நடந்து  செல்வார்கள்.

அந்த நான்கு  இடங்களிலும்  கூட்டம்  பெருகி  வருகிறது.