எம்எச்370 காணாமல் போனதை அடுத்து குழப்பம் நிலவியதாக அறிக்கை தெரிவிக்கிறது

searchநேற்று,  மலேசியா, எம்எச்370  காணாமல்  போனபின்னர்  நடந்தவற்றை  விவரமாக  விளக்கும்  அறிக்கையை     வெளியிட்டது. அவ்வறிக்கை,  பாதையை  விட்டு  விலகிய  விமானம்  சென்றிருக்கக்  கூடிய  திசையை  விவரித்ததுடன்  விமானம்  காணாமல்  தெரிந்ததும்  குழப்பம்  நிலவியதாகவும்  குறிப்பிட்டது.

விமானம்  காணமல்  போனதற்கும்,  தேடும்பணியைத்  தொடங்க  முடிவெடுப்பதற்குமிடையில்  நான்கு  மணி  நேரம்  கடந்து விட்டதென  அது  கூறியது.

அது,  விமானம்  காணாமல் போனதை  அடுத்து  நடந்ததை  விவரிக்கும்  ஓர்  அறிக்கைதானே  தவிர,  எட்டு  வாரங்களுக்குமுன்  காணாமல்போன  விமானம்  பற்றிய  பல  கேள்விகளுக்கு  அதில்  விடை  இல்லை.

விமானப்  போக்குவரத்து  வரலாற்றிலேயே மிகப்  பெரிய  தேடும்பணி  மேற்கொள்ளப்பட்ட  பின்னரும்  எம்எச்370 காணாமல்போனது  எப்படி  என்பது  புரியாத  புதிராகவே  உள்ளது.

மார்ச்  8ஆம் நாள்  அதிகாலையில்  விமானம்  தீவகற்ப  மலேசியாவைக்  கடந்து  மேற்கு  நோக்கிப்  பறப்பதை  இராணுவ ரேடார்  கண்டிருக்கிறது. ஆனால்,  ரேடாரை இயக்கிக்  கொண்டிருந்தவர்  அதை  “நட்பு”  விமானம்  என்று  கருதி  மேற்கொண்டு  நடவடிக்கை  எடுக்காதிருந்து  விட்டார்  என்றும்  அறிக்கை  குறிப்பிட்டது.