சரவாக்கின் பாத்தாங் சாடோங் தொகுதியை பிகேஆர் இரத்துச் செய்தது

sarawakசரவாக்கின்  பாத்தாங்  சாடோங்  தொகுதியில்  கடந்த  வாரம்  நடைபெற்ற கட்சித்  தேர்தலில் மோசடி  நிகழ்ந்திருப்பதாக  தெரிய வந்திருப்பதால்  பிகேஆரின்  மத்திய  தேர்தல்  குழு(ஜேபிபி)  அத்தொகுதியை  இரத்துச்  செய்துள்ளது.

மேலும், போட்டியின்றித்  தேர்ந்தெடுக்கப்பட்ட   தொகுதித்  தலைவர்  உள்பட, கட்சியின்  தலைமைப்  பொறுப்புகளுக்கு  வெற்றிபெற்றவர்களை கட்சிநீக்கம்  செய்யவும்  அக்குழுவின்  தலைவர் ஜொஹரி  அப்துல்  கட்சியின்  ஒழுங்கு  வாரியத்துக்குப்  பரிந்துரைத்துள்ளார்