நேற்றிரவு 10.35க்கு, சுமத்ராவின் நியாஸ் தீவுகள் வட்டாரத்தில் 5.7 ரிக்டர் அளவு கொண்ட நில நடுக்கம் தாக்கியது. அதன் அதிர்வுகள் பேராக்கிலும் சரவாக்கிலும் பல இடங்களில் உணரப்பட்டன.
நில நடுக்கம், நியாஸ் தீவுகளிலிருந்து 68 கிலோ மீட்டர் தொலைவிலும் சாபாக் பெர்னத்திலிருந்து 408 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியது.